நடிகர்கள் விஜய், அஜித் போட்ட ரோட்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசமாக மாட்டிக் கொண்டதாக, 'தலைவர் 169' தொடர்பாக இணையதளத்தில், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ரஜினியின் 'அண்ணாத்த' படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டன.
தலைவர் 169
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரஜினியின் 'தலைவர் 169' படம் குறித்தப் பரபரப்புத் தகவல்கள் வெளியாயின. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
சொதப்பல்
இந்நிலையில் கடந்த வாரம் நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படம் வெளியானது. இந்தப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. நெல்சன் திரைக்கதை அமைப்பில் சொதப்பி விட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
பீஸ்ட்டை தொடர்ந்து 'தலைவர் 169' படத்தை இயக்கவுள்ளார் நெல்சன் திலீப்குமார்.விஜய்யை தொடர்ந்து அடுத்து ரஜினி மாட்டிக்கொண்டதாக, நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
சிக்கியக் கதை
இதில் நினைவுகூறத்தக்க விஷயம் என்னவென்றால், 'தலைவர் 169' பட வாய்ப்பு கிடைக்க காரணமே விஜய்தான். 'பீஸ்ட்' பட ஷுட்டிங்கின் போதே ரஜினி சாரை வைத்து நீங்க படம் பண்ணினால் நல்லாருக்கும் என விஜய் சொன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் நெல்சன்.
அதே போல் 'அண்ணாத்த' பட வெளியீட்டின் போதும், அஜித் தான் ரஜினி சாரை வைத்து நீங்க படம் பண்ணுங்கள் என கூறியதாக தெரிவித்திருந்தார் இயக்குனர் சிவா.
இவ்விருக் கருத்துக்களின் அடிப்படையிலேயே இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். திட்டம் போட்டு விஜய், அஜித் இருவரும் தலைவர் மாட்டிவிட்டு விட்டதாக மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!