1. செய்திகள்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Milk purchase price hike by Rs 10 per liter?

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்று பால் விலை விரைவில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முனுசாமி தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலர் முகமது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பால் கொள்முதல் விலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

10 ரூபாய் உயர்வு

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டரில் இருந்து 26 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், இது மேலும் குறையும் சூழல் உருவாகியுள்ளதாகவும், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், பசும்பாலுக்கு 42 ரூபாயும் எருமைப் பாலுக்கு 50 ரூபாயும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு மானியமாக ரூ.270 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வைத்துள்ளது.

தீவன ஆலைகள்

மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்க வேண்டும் என்பதோடு, மதுரை கப்பலூர், வேலூர், ஆம்பூர், ஆகிய மூடிக்கிடக்கும் கால்நடை தீவன ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதோடு, சத்துணவில் குழந்தைகளுக்கு உணவுடன் ஆவின் பால் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வராவிட்டால் வருகிற மே மாதம் பால் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

English Summary: Milk purchase price hike by Rs 10 per liter? Published on: 18 April 2022, 08:02 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.