விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் நிறைந்த பல்வேறு தொழில்களுக்குத் தேவைப்படுவது போலவே மூலதனம் என்பது விவசாயத்திற்கும் தேவை என்பதை மறுக்க முடியாது. மூலதனம் சார்ந்த நிலையில் அரசே குறைந்த வட்டியில் விவசாயிகளுக்குக் கடன்களை வழங்குகிறது.
கிராமத்தின் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடனில் பாதியளவு விவசாயத்திற்குத் தேவையான பொருட்களாகவும், மீதியளவு விவசாயம் செய்ய தேவையான பணமாகவும் வழங்கப்படுகிறது. இத்தகைய கடன்களுக்குக் குறைவான வட்டியே விதிக்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.
விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த கடன் வசதி இரண்டு நிலைகளில் வழங்கப்படுகின்றன. விவசாயத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள், களைக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் முதலான இடுபொருட்களாக வழங்கப்படுகிறது. இரண்டாவதாக, நீர் மேலாண்மை, எலி ஒழிப்பு, பூச்சி பூஞ்சாண மருந்து தெளித்தல், உழவு, களை எடுத்தல், அறுவடை முதலான வேலைகளுக்குத் தேவைப்படும் பணமாக வழங்கப்படுகிறது.
பயன்
- குறைந்த வட்டி
- எளிய தவணை
- உடனடி சேவை
பெற தகுதி
- சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்க வேண்டும்.
- குத்தகையாக இருப்பின் குத்தகை சான்று வைத்திருக்க வேண்டும்.
- வேறு நிறுவனக் கடன்கள் பெற்றிருக்கக் கூடாது.
- அப்படி பெற்றிருந்தால் அந்த கடனைச் சரிவரக் கட்டக் கூடியவராக இருக்க வேண்டும்.
தேவையான சான்றுகள்
- நிலத்தின் சிட்டா
- நிலத்தின் பட்டா
- வரைபடம்
- ரசீது
- கிராம நிர்வாக அலுவலரின் சான்று
- புகைப்படம்
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்க மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!
எப்படி பெறுவது?
- வங்கியில் பயிர்க்கடன் விண்ணப்பப் படிவம் வாங்கிப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
- தேவையான சான்றிதழ்களை இணைத்து வங்கியில் கொடுக்க வேண்டும்.
- வங்கியில் சொந்த கணக்கு வைத்திருக்க வேண்டும்.
திரும்பச் செலுத்தும் முறை
எந்த வகையான பயிர் சாகுபடிக்காகக் கடன் வழங்கப்படுகிறதோ அந்த பயிரின் அறுவடைக் காலம் முடிந்த இரண்டு மாதத்திற்குள் வட்டியும், அசலும் சேர்த்துக் கட்டி முடிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கான நபார்டு வங்கியின் கடன் திட்டம்: என்னென்ன?
கடன்தொகை ஏக்கருக்கு ஏக்கர் ஆண்டுதோறும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த ஆண்டிற்கான ஏக்கருக்குக் கடன் தொகை எவ்வளவு என்பது மாவட்டத் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க