Farm Info

Monday, 07 December 2020 07:45 AM , by: Elavarse Sivakumar

Credit: Magzter

தமிழக அரசின் அம்மா இருச்சகர வாகனத்திட்டத்தில் (AMMA Two Wheeeler Scheme) 50 சதவீத மானியத்தில், இருசக்கர வாகனம் பெற பணிக்கு செல்லும் அல்லது சுயதொழில் செய்யும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் (Qualifications)

  • தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவராகவோ அல்லது சுயதொழில் செய்பவராகவோ இருத்தல் வேண்டும்.

  • பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்று இருத்தல் வேண்டும்.

  • திட்டம் பணிக்கு செல்லும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

  • பயனாளிகள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-ந் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்டவையாக இருப்பது அவசியம்.

  • 125 சி.சி. (CC)திறனுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டியது கட்டாயம்.

  • இந்திய வாகன சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டியது அவசியம்.

முன்னுரிமை (Priority)

இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • வயது வரம்பு சான்று

  • இருப்பிட சான்று

  • ஓட்டுநர் உரிமம்

  • வருமான சான்று

  • பணிபுரிவது மற்றும் சுய தொழில் புரிவதற்கான சான்று

  • ஆதார் அட்டை

  • கல்வி சான்று

    (குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி)

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

  • விதவை

  •  ஆதரவற்ற மகளிர்

  • 35 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ்

  • ஜாதி சான்றிதழ்

  • மாற்றுத்திறனாளிகள் சான்று

  •  இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல்

தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

தகவல்
இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

இயற்கை தேனி வளர்ப்பாளர்கள் பக்கம் திரும்பிய வாடிக்கையாளர்கள் - தேனில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

விண்வெளியில் முள்ளங்கி சாகுபடி - அசத்திய Astronaut!

ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)