1. தோட்டக்கலை

ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Do you know how many years an inch of soil is?

Credit : Dinasari

மனிதன் உயிர்வாழ மட்டுமல்ல, இந்த உலகை விட்டுப்பிரியும்போது, நம்மை அரவணைத்துக்கொள்வது மண்தானே(Soil).

அதுமட்டுமல்ல, நாம் வாழும் காலங்களிலும், நம்முடைய எல்லா அசைவுகளிலும் மண்ணின் பங்கு இன்றிமையாதது. ஏனெனில், நான் உயிர்வாழ அடிப்படையான உணவை உருவாக்க மண் அவசியம்.

அவனின்றி அணுவும் அசையாது என்பதுபோது, மண் இன்றி மனிதகுலம் இல்லை எனலாம். அவ்வாறு, நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட மண்ணை கவுரவிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதரின் கடமை. அதற்காகவே ஆண்டுதோறும் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச மண்வள தினமாகக் (World Soil Day) கொண்டாடப்படுகிறது.

1000 ஆண்டுகள்  (1000 Years)

எனவே இன்னாளில் மண்ணின் மகத்துவத்தை நாம் நினைத்துப்பார்க்க வேண்டியது முக்கியமே. ஒரு அங்குலம் மண்ணை உருவாக்க இயற்கைக்கு குறைந்தபட்சம் 1000 வருடங்கள் தேவைப்படுகிறது.

மேல் மண்(Top layer of the soil)

நிலத்தில் 5 இன்ச் (Inch) மேலே இருந்து இருக்கும் மண். இதில் தான் தாவரங்களுக்கு தேவையான எல்லா சத்துக்களும், நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.ஆனால், நம் தலைமுறை மேல் மண்ண வெகு வேகமாக இழந்து வருகிறோம். இதே வேகத்தில் நாம் மேல் மண்ணை இழந்தால் 60 ஆண்டுகளில் விவசாயமே செய்ய முடியாது என்கிறது உலக உணவு நிறுவனம் (UN Food and Agricultural Organization). இப்போதே, உலகத்தில் உள்ள மேல் மண்ணில் மூன்றில் ஒரு பகுதி அழிந்து விட்டது.

Credit : Pinterest

மேல் மண் அழிவதற்கு முக்கிய காரணங்கள் ரசாயன உரங்கள், காடுகளை அழிப்பது, வெப்பமயமாதல் ஆகியவை. மேல் மண்ணே உலகத்தின் எல்லா உயிர்க்கும் அடிப்படை. 95% நம் உணவு இதில் விளையும் பயிர்களில் இருந்த வருகிறது என்கிறார் சமேடோ, உலக உணவு நிறுவனத்தின் இயக்குநர்.

எனவே மண்ணைப் பாதுகாக்க மனித குலம் ஏதாவது வேகமாக செய்யாவிட்டால், 2050இல் உழுவதற்கான நிலம் 1960இல் இருந்ததை விட 1/4 அளவே இருக்கும் என்பது நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

நல்ல மண் வளம் இருந்தால்  நீரை சேர்ப்பது, கார்பனை சேர்ப்பது , பல உயிரினங்களை வாழ வழிவகை செய்வது உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேநேரத்தில் மண்வளம் குறைந்து வருவதால் ஒரு மோசமான சுற்று ஆரம்பிக்கிறது என்கிறார் அவர். உலகம் மேலும் வெப்பமாகிறது, இதனால் மேலும் நிலம் பாழாகிறது.

ஒவ்வொரு நிமிடமும் 30 கால்பந்து மைதானம் அளவிலான மண்வளத்தை நாம் இழந்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணமே ரசாயன விவசாயமே என்கிறார் வோலேர்ட்.
எனவே மண்ணைப் பாதுகாக்க வேண்டுமென்றால், "மரபு வழி இயற்கை விவசாயத்தை நாம் கைடியல் எடுக்க வேண்டியது தற்போதையத் தேவை. மேல் மண்ணில் சத்துக்களை அதிகரிக்க "மக்கு" அவசியம். மக்கு உண்டாக்க, "மூடாக்கு"அவசியம்.மூடாக்கு உருவாக்க "உயிர் வேலி" அவசியம்.

பசுமைப் போர்வை -
கோ.வெ.கோவிந்தராஜு
8526591845

மேலும் படிக்க...

புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!

English Summary: Do you know how many years an inch of soil is?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.