1. Blogs

விண்வெளியில் முள்ளங்கி சாகுபடி - அசத்திய Astronaut!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Harvesting radish in space - Unreal astronaut!
Credit : NASA

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில், காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது குறித்தும், ஆய்வு நடக்கிறது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் (NASA) உதவியுடன் நடக்கும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடுகு, முட்டைக் கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகியவை விளைவிக்கப்பட்டன.

முள்ளங்கி அறுவடை (Radish Harvest)

இதன் தொடர்ச்சியாக, தற்போது, முள்ளங்கி வளர்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் (radish) அறுவடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை, நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், பக்குவமாக குளிர்சாதனப் பெட்டியில், பாதுகாப்பாக வைத்தார். அடுத்த ஆண்டு, 'ஸ்பேஸ்எக்ஸ்'  (SpaceX) விண்கலம் மூலம், இந்த முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆய்வு செய்யப்படும்.

Credit : Dinamalar

ஊட்டச்சுத்து நிறைந்த சுவையான முள்ளங்கி, விரைவாக வளரக் கூடியது என்பதால், இதனை ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும், பூமியை விட விண்வெளி ஆய்வு மையத்தில் பல மடங்கு விரைவாக வளர்ந்திருப்பதாகவும், இந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

English Summary: Harvesting radish in space - Unreal astronaut! Published on: 06 December 2020, 09:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.