பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 January, 2022 10:21 AM IST
75% subsidy for setting up AC in fruit and vegetable outlets!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, பீகார் அரசு பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏசி (AC) சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. பாட்னாவில் உள்ள செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் உடன் இணைக்கப்பட்ட தோட்டக்கலை உற்பத்தி (பழங்கள் மற்றும் காய்கறிகள்) விற்பனை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பீகார் மாநில விவசாய அமைச்சர் அமரேந்திர பிரதாப் சிங் இதனை அறிவித்தார்.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழும், விவசாயத் துறையின் தோட்டக்கலை இயக்குநரகத்தின் கீழும் பாட்னாவின் பந்த் பவன் பெய்லி சாலையில் உள்ள வளாகத்தில் ஏசி சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு 'தோட்டக்கலை தயாரிப்பு விற்பனை மையம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மையத்தின் பரப்பளவு திட்டத்தின் படி 12 க்கு 12 அடி மற்றும் அதன் சேமிப்பு திறன் 9 மெட்ரிக் டன் ஆகும். இதில், முக்கியமாக ஆர்கானிக் மற்றும் உயர்தர பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த காய்கறிகள் கிடைக்கும் (These vegetables are available)

உயர்தர காய்கறிகளான சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், செர்ரி தக்காளி, விதையில்லா வெள்ளரி, கீரை, மஞ்சள் மற்றும் ஊதா காலிஃபிளவர், சிவப்பு முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காளான் மற்றும் ஹைடெக் நர்சரிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யப்படும்.

பழங்களுக்காக மட்டுமே மையங்கள் ஏற்படுத்தப்படும் (Centers will be set up only for fruits)

செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் - பூர்வீக முறையின் படி உற்பத்தி செய்யப்படும் பப்பாளி, மாம்பழம், லிச்சி, ஜாமுன், பிளம், கொய்யா, வாழை, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் பழச் செடிகள் விற்பனை செய்யப்படும். இங்கு பீகார் மாநில விதை மற்றும் கரிம சான்றளிப்பு (State Seed and Organic Certification) பெற்று, உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் காய்கறிகளும் விற்பனை செய்யப்படும்.

பீகார் மாநில தோட்டக்கலை தயாரிப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாவட்ட வாரியாக அடையாளம் காணப்பட்ட சிறப்பு தோட்டக்கலை பயிர்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என்றும், இந்த மையத்தில் இருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திட்டத்தின் பலனைப் பெறுபவர்கள் (Beneficiaries of the scheme)

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தனி விவசாயி அல்லது தொழில்முனைவோருக்கு 50 சதவீத மானியமும், ஏசி (AC) அமைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த யூனிட் செலவான ரூ.15 லட்சத்தில் எஃப்.பி.ஓ அல்லது எஃப்.பி.சி.க்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகள், உழவர் குழு, தொழில்முனைவோர் அல்லது பொதுத்துறை பிரிவு அல்லது கூட்டுறவு நிறுவனம், பதிவு செய்யப்பட்ட சங்கம் போன்றவை இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ, இந்த பானத்தை ட்ரை செய்தீர்களா?

பொங்கல் பரிசு வழங்க விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல்

English Summary: 75% subsidy for setting up AC in fruit and vegetable outlets!
Published on: 06 January 2022, 10:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now