PM Kisan: விவசாயிகளுக்கு ரூ. 16,000 கோடி மானியம், TN Govt: ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க அறிவுறுத்தல், Ration: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் மு.க. ஸ்டாலின், G-20: இந்தோனேஷியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி, தமிழில் மருத்துவப் புத்தகம் வரும் டிசம்பரில் கிடைக்கும்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் முதலான இன்றைய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
PM Kisan: விவசாயிகளுக்கு ரூ. 16,000 கோடி மானியம்!
விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி திட்டங்களைச் செய்து வருகின்றன. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் தவணை வெளியிடப்பட்டது. அதோடு, பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா எனும் 600 வேளாண் வளர்ச்சி மையங்களும் தொடக்கி வைக்கப்பட்டன. மேலும் ஒரே நாடு, ஒரே உரம் எனும் திட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு விவசாயிகளுக்கு ரூ.16000 கோடி மானியம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.எம் கிசானின் 13-வது தவணை வரும் டிசம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலங்களின் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்கள்: PMFBY திட்டம்: உடனே குறுவை பயிருக்கு காப்பீடு செய்யுங்க
TN Govt: ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க அறிவுறுத்தல்!
வடகிழக்கு பருவ மழை தமிழகமெங்கும் மிகப்பெரிய அளவில் பெய்து வருகிறது. அவ்வப்போது புயல் உருவாகிற காரணத்தினால் மழை தீவிரமடைந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட மழை பெய்யும் அளவு அதிகரித்து இருக்கிற காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் பல்வேறு பகுதிகளில் திறந்து விடப்பட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட வேண்டும். அதில் முதல் கட்ட நிவாரண தொகையை அவர்கள் வங்கி கணக்கில் தமிழக அரசு உடனடியாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: GST மற்றும் E-way Billing (Advance) குறித்த இணையவழி பயிற்சி
Ration: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்த பின் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கூடுதல் தகவலுக்கு: தலா ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.1000: CM Stalin உத்தரவு!
MK Stalin: மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் மு.க. ஸ்டாலின்!
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, உமையாள்பதி பகுதியில் கனமழையால் பாதிப்படைந்த விளை நிலங்களை நேரியில் பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். நேரில் வந்த முதல்வரிடன் நீரில் மூழ்கி இருக்கும் நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்துக் காண்பித்தனர். கடந்த மூன்று நாட்களாக்ப் பெய்த கனமழையால் நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் மூழ்கி இருக்கின்றன. அதோடு, சிதம்பரம், வல்லம்படுகையில் கனமழைக்கு தங்களின் வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை முதல்வர் வழங்கினார். மேலும், குறிஞ்சிப்பாடி, கீழ்பூவாணிக்குப்பம் பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர், அங்கு வெள்ள பாதிப்புகள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சிகளைப் பார்வையிட்டார். இந்நேரடி ஆய்வின்போது தமிழக அமைச்சர்களான நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இந்தோனேஷியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி!
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் இன்றும் நாளையும் என இரு நாட்கள் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கந்துகொண்டார் இந்தியப் பிரதமர் மோடி. பாலி சென்ற பிரமரை அந்நாட்டு அரசு உயரதிகார்கள், தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன. அதோடு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று அமர்வுகளில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், ஜி-20 தலைவர்கள் சிலரையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேச உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் மருத்துவப் புத்தகம் வரும் டிசம்பரில் கிடைக்கும்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!!
உலக நீரழிவு நோய் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். அப்போது பேசிய அவர், கடந்த ஓராண்டிற்கு முன்பாகவே முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான படப் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் தொடங்கி விட்டது என்றும் குறிப்பாக இயன் முறை மருத்துவம், நோய் தீர்க்கும் உணவு மருத்துவம், காயவியல், மருத்துவ தொழில் நுட்பவியல் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் முதலான 14 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன எனத் தகவல் தெரிவித்துள்ளார். இதில் 7 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு முடிந்து வரும் டிசம்பர் மாதம் வர இருக்கின்றன எனத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
PMEGP: ரூ. 80,000 மானியம் முதல் இன்றைய வானிலை வரை!
PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!