ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்திய விளை பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விவசாயியா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு பெரும் வாய்ப்புள்ளது. இந்தப் பரிசை தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் அளிக்கிறது, இதனைப் பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்: எப்படி?
சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத் திறன், குறைவான ஈரப்பதம் போன்ற குணநலன்களைக் கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்தும் போது அதிக விளைச்சல் பெறலாம். மேலும், சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சை நிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக்கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம் என்பது குறிப்பிடதக்கது.
மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்க அழைப்பு!
மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் 2022-23 ம் நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ. 2.7 லட்சம் பசுந்தீவனம் வளர்ப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கால்நடை பராமாரிப்புத்துறை மூலமாக, திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாய பெருமக்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையின் அறிவிப்பு
தோட்டக்கலையில் ஊடுபயிர் செய்து, இரட்டிப்பு லாபம் தரக்கூடிய பல பயிர்கள் உள்ளன. அதற்கு ஏற்ற மரக்கன்றுகள், செடிகள் என அனைத்தையும் வழங்க தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது. நீர் வசதி உள்ள விவசாயிகள் ஆண்டு முழுவதும், இத்தகைய மரம், செடிகளை நடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அல்லது 3 புதிய பயன் தரும் தோட்டக்கலைப் பயிர்களை தனது பண்ணையில் தேர்வு செய்து நட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும். தனியார் நர்சரி மூலம் விற்பனை செய்யப்படும் கன்றுகள் வாங்கும் போது அரசிடம் பதிவு செய்ததா? என்று விசாரித்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தோட்டக்கலைத்துறையின் மூலம் மதிப்பு சான்று பெற்ற நர்சரிகள் மட்டுமே நல்ல கன்றுகளை தர இயலும்.
பலன் தரும் செடிகள்: நர்சரியில் பெறலாமே!
PM Kisan:- 12வது தவணை வரும் தேதி இதுதான்!
பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைத் தொகை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் பயனாளிகளுக்கு EKYC ஐ அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பலனைப் பெறும் விவசாயிகள் இப்போது ஜூலை 31 ஆம் தேதிக்குள் eKYCஐப் புதுப்பிக்க வேண்டும். மேலும் தற்போது வெளியான தகவலின் படி, 12வது தவணை தொகை செப்டம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு அரசு மூலம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
PM Kisan:- 12வது தவணை வரும் தேதி இதுதான்!
கல்வி: பள்ளிகள் சூழற்சி முறையில் நடத்த அலோசனை
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் சில நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐம்பதுக்கும் கீழ் பதிவாகி வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 2500க்கும் மேல் பதிவாகி வருகிறது. தொடர்ந்து ஆறு நாள்களாக பாதிப்பு 2000க்கும் அதிகமாக பதிவாகிவருவதால் அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக வகுப்புகளை சுழற்சி முறையில், அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க: கால்நடை வளர்ப்புக்கு 50 லட்சம் உட்பட 50% மானியம் பெறவும்!
இரண்டாவது நாளாக சரிவில் தங்கம் ரூ.1,064 குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை இன்றும் 2-து நாளாகக் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 நாட்களில் மொத்தம் 1,064 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது சிறிது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று ஒரு சவரன் தங்கம், அதிரடியாக மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்கப்படுகிறது. இன்று கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4672-க்கு விற்கப்படுகிறது.
NHAI ஆட்சேர்ப்பு 2022: BE படித்திருந்தால் மாதம் 39k சம்பளம்!
இன்றைய வானிலை அறிவிப்பு: 07-07-2022
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: