1. மற்றவை

Beef Tweet: சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறையினர்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Beef Tweet: Chennai police involved in controversy

மாட்டுக்கறி என ட்விட்டரில் பதிவிட்டவரை கண்டிக்கும் சென்னை மாநகர காவல்துறை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அந்த ட்விட்டில் என்ன இருந்தது என்று பதிவில் காணுங்கள்.

நாட்டில் பல்வேறு இந்து அமைப்பினர் மாட்டிறைச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக ஆளும் சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாட்டை எதிர்த்து பல்வேறு தரப்பினர் அவ்வப்போது மாட்டிறைச்சி உண்ணும்போது இணையத்தளத்தில் அதை புகைப்படம் எடுத்து பகிர்வதுண்டு.

அவ்வாறு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் மாட்டிறைச்சி உணவை புகைப்படம் எடுத்து 'மாட்டு கறி' என ட்விட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவிற்கு, 'தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்' என்று சென்னை மாநகரக் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்திலிருந்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்த காரணமாக இருந்தது.

சென்னை காவல்துறையின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த தர்மபுரி மக்களவை உறுபினர் செந்தில்குமார், இந்த ட்விட்டர் பக்கத்தை யார் கையாளுகிறார்கள். அந்த பதிவில் என்ன தப்பு இருக்கிறது. என்ன பதிவிட வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை" என்று பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ட்விட்டர் பிதிவை நீக்கிய சென்னை காவல்துறை, தாங்கள் பதிவிட்ட ட்வீட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் ரீட்வீட் செய்யபட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே, இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

பலன் தரும் செடிகள்: நர்சரியில் பெறலாமே!

சரிவில் தங்கம் விலை- 2 நாட்களில் ரூ.1,064 குறைந்தது!

English Summary: Beef Tweet: Chennai police involved in controversy Published on: 07 July 2022, 03:12 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.