பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 May, 2022 8:07 AM IST

மத்திய அரசின் PM Kisan பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பெற ஏதுவாக, புதிய வசதி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நிதிச்சுமையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும், மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை அரசாங்கம் ரூ.2,000 ஐ தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். 11வது தவணை விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை, எளிதாக பெற அஞ்சல் துறை புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் PM-KISAN என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பயன்பெறுகிறாா்கள். இந்த விவசாயிகள் மே 31, 2022 க்குள் P.M .கிசான் இணையதளத்தில் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ரூ. 50 கட்டணம்

அப்போது, கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை தொடா்புக் கொண்டு ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைக்கலாம். இதற்காக அவர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைக்கு ரூ. 50 கட்டணம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க...

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

English Summary: Attention PM- Kisan Users - Introducing New Facility!
Published on: 13 May 2022, 03:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now