Buy fertilizers at subsidized price: Government request
யூரியா உள்பட மானிய உரங்கள் கையிருப்பு தொடர்பாக தமிழக அரசு, தற்போது செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது: இதில், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெட்டிரிக் டன் யூரியா, 26,000 மெட்ரிக் டன் டிஏபி, 15,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு பதிவை படிக்கவும்.
இதுநாள்வரை, 53,420 மெட்ரிக் டன் யூரியா, 10,900 மெட்ரிக் டன் டிஏபி, 4,739 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 16,950 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் உர நிறுவனங்களால் இம்மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
மேலும், ஒதுக்கீட்டின்படி 97 சதவீத யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட போதிலும், இம்மாத இறுதிக்குள் 15,700 மெட்ரிக் டன் யூரியா கூடுதலாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிஏபி உர ஒதுக்கீட்டில், இதுநாள் வரை 42 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,100 மெட்ரிக் டன் டிஏபி உரம் வழங்குவதற்கு, வேளாண்மைத் துறையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஐபிஎல் நிறுவனத்தால், கங்காவரம் துறைமுகத்திலிருந்து 3,000 மெட்ரிக் டன் டிஏபி உரம் மற்றும் இப்கோ உர நிறுவனத்தால், காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இவ்வார இறுதிக்குள் 4,500 மெட்ரிக் டன் டிஏபி வழங்கப்படும்.
மேலும், டிஏபி உரத்தேவையினை ஈடுசெய்திட கிரிப்கோ நிறுவனம் இம்மாத இறுதிக்குள் கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் டிஏபி உரத்தினை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 70 சதவீதம் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களில், 25,000 மெட்ரிக் டன்னிற்கு அதிகமாக பொட்டாஷ் உரம் இருப்பில் இருந்தபோதிலும், 10,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தினை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தேவையின் அடிப்படையில் ஐபிஎல் நிறுவனத்தினால், தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த வாரத்தில் 20,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் சரக்கு கப்பல் வாயிலாக தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக வந்தடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இத்துடன் சேர்த்து, தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக 30,000 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தலைமையிடத்தில் செயல்படும் உர உதவி மையம் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்கும் பகுதிகளுக்கு, உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் தேவையான உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
உரப்பதுக்கல் எதிரான ஆய்வு எவ்வாறு நடைபெறும்:
உரப்பதுக்கல் மற்றும் உரம் கடத்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை முற்றிலும் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட வேளாண்மைத்துறை, அலுவலர்களைக் கொண்ட சிறப்பு ஆய்வுக்குழுவினர், உரக்கடைகளில் விற்கப்படும் உரத்தின் விலை மற்றும் உரம் விற்பனை செய்யும் போது, விவசாயிகளுக்கு வற்புறுத்தி இதர இணை பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்சமயம், 54,000 மெட்ரிக் டன் யூரியா, 22,800 மெட்ரிக் டன் டிஏபி, 25,500 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 1,07,700 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள், கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளன என வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருப்பில் உள்ள மானிய உரங்களை வாங்கி பயனடையும்படி வேளாண் பெருங்குடி மக்களை, அரசு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
தமிழகம்: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
தமிழகம்: பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தயார் - பதிவிறக்கம் செய்யலாம்