1. செய்திகள்

தமிழகம்: பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தயார் - பதிவிறக்கம் செய்யலாம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil Nadu: How to download the hall ticket for the general examination?

10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அதாவது ஹால் டிக்கெட் ஏப்ரல் 22 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில், இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அந்த வகையில் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை, சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்க உள்ளன.

இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய தகவல் மாணவர்களுக்கு, அவர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை தனித்தேர்வர்கள் (ஏப்ரல் 20) முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், முன்பே அறிவிப்பு வெளியானது குறிப்பிடதக்கது.

மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற ஆதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் முதலில், மேற்கண்ட இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தாங்கள் பயிலும் வகுப்பு விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயனர் எண் அதாவது (USER ID) மற்றும் கடவுச் சொல் அதாவது (PASSWORD) கொண்டு உள்நுழைந்து, தங்களின் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துக் கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தி வைப்பு : முதலமைச்சர் விளக்கம்

முந்திரி பருப்பு பயிர் லாபமா? என்னென்ன செய்ய வேண்டும்?

English Summary: Tamil Nadu: Hall tickets for general examination are ready - can be downloaded Published on: 22 April 2022, 11:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.