1. செய்திகள்

மத்திய நிதியமைச்சர் - வேளாண்மைத்துறை வளர்ச்சிக்கு மானியத்துடன் முதலீடும் தேவை

KJ Staff
KJ Staff

வேளாண் துறை வளர்ச்சிக்கு மானியத்துடன் முதலீடும் தேவை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்கு மானியங்கள் மட்டும் போதாது; அத்துறையில் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் தன்னிறைவு பெற்று வாழ முடியும். முதலீட்டுக்கான வளங்களை முறையாகத் திரட்டுவதுதான், ஒரு சிறப்பான பொருளாதாரத்தை உருவாக்கும்.  

அப்போதுதான் நாம் வளர்ச்சியின் பயன்களை நேரடியாக உணர முடியும். இதற்கு, மூலதன உருவாக்கம் என்பது அரசின் கைகளில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் பரவலாக நடைபெற வேண்டும். இந்தியாவில் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. மானியம் வழங்குவதுடன் நின்றுவிடாமல், முதலீட்டையும் அதிகரிக்கும்போதுதான் வேளாண்துறை மேன்மையடையும். மானியத்தை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பது ஏற்புடையதாக இருக்காது.  முதலீடுகள்தான் விவசாயிகள் தற்சார்புடன் இருப்பதை உறுதி செய்யும். விவசாயிகள் முழு பொருளாதார பலத்துடன் செயல்படும்போதுதான் இந்திய வேளாண் துறையும் சிறப்பான கட்டத்தை எட்டும்  என்றார் அவர்.

English Summary: Central Finance Minister - Investment with subsidies for agriculture development

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.