மத்திய அரசு பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிக்க ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம் என்ற புதிய திட்டத்தை தேனியில் துவங்கியுள்ளது.
பட்டுப் புழு வளர்ப்பு (Silkworm rearing)
தேனி மாவட்டத்தில் பட்டுப் புழு வளர்ப்பிற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் பட்டுப்புழு, மல்பெரி செடி வளர்த்தல் லாபகரமான தொழிலாக அமைகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்டு உற்பத்தியில், தேனி 2வது இடத்தில் (2nd Place) உள்ளது. இந்த மாவட்டத்தில் 600ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்து புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெண் பட்டு கூடு கிலோ ரூ.260 ல் இருந்து ரூ.310 வரை சராசரியாக விலை போகிறது.
சுபநிகழ்ச்சிகள், பண்டிகைக் காலங்களை (Festival Season) முன்னிட்டு பட்டு ஆடைகள் பயன்பாட்டால் பட்டு நுால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பட்டு கூடு விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசு 'ஒரு உற்பத்தி ஒருமாவட்டம்' என்ற புதிய திட்டத்தின்படி, பட்டுப்புழு வளர்க்க தேனி, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன.
இத்திட்டத்தால் பட்டு வளர்ப்பில் அதிக விவசாயிகள் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசின் மானியங்கள் கூடுதலாக கிடைக்கும். 200 விவசாயிகளை பட்டு புழு வளர்ப்பில் ஈடுபடுத்த திட்டம் தயாராகி வருகிறது.
மேலும் படிக்க...
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி - அதிக மகசூல் பெற 8 யோசனைகள்!