1. விவசாய தகவல்கள்

தென்னை விவசாயிகளே! தேங்காயை மதிப்புக் கூட்டிப் பாருங்கள்! இலாபத்தை அள்ளுங்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : eFresh.com

தென்னை மரங்கள் (Coconut Tree), இயற்கை நமக்களித்த வரம். தமிழகத்தில் நிறைய கிராமங்களில் எண்ணில் அடங்காத வகையில் தென்னை மரங்கள் அதிகமாய் உள்ளது. விவசாயிகள், வறட்சியிலும் தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீரைப் பாய்ச்சி தேங்காய்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

கஜா புயலால் சரிந்த தென்னை மரங்கள்:

கஜா புயலின் (Gaja) தாக்கத்தால், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள், சட்டென்று சரிந்து விழுந்தது விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அன்றாடத் தேவைக்கும் அல்லல்படும் நிலையில் விவசாயிகள் தத்தளித்தனர். ஆண்டாண்டுகளாய் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளித்த தென்னை மரங்கள் அடியோடு வீழ்ந்தது ஒட்டு மொத்த தமிழகத்தையே புரட்டிப் போட்டது. அதிலிருந்து விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தேங்காய்களை மதிப்புக் கூட்டி விற்கும் யோசனையை பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

மதிப்புக் கூட்டுதல்:

வறட்சியிலும், உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு நல்ல விலையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இளநீர், தேங்காய்ப் பால், பவுடர், தேங்காய் சிப்ஸ் (Coconut Chips) போன்ற பல பொருட்கள் தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தால் இலாபம் காண இயலும். மதிப்புக் கூட்டினால் வருவாய்க் கூடும் என்பதை விவசாயிகள் அறிய வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட இளநீர், தேங்காய் பவுடர் (Coconut Powder), தேங்காய் பால் (Coconut Milk) ஆகியவற்றினை மூலப்பொருட்களாக கொண்டு 50க்கும் மேற்பட்ட உப பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகும், வருமானமும் அதிகரிக்கும்.

Credit : Just dial

எண்ணெய் மற்றும் கயிறு தயாரித்தல்:

தேங்காயிலிருந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெய் (Coconut Oil), நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகம் என்பதால், விவசாயிகள் எண்ணெய் தயாரிக்க முன்வந்தால் இலாபம் பெருகும். தேங்காயை உரித்தால் கிடைக்கும் நார்களைக் கொண்டு வலுவான கயிறு தயாரிக்கலாம். கயித்துக் கட்டிலுக்கு தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட கயிறுகளே அதிகளவில் பயன்படுகிறது.

பயிற்சி அவசியம்:

தேங்காயை மதிப்புக் கூட்டி, பல உப பொருட்களை தயாரிக்க, தென்னை விவசாயிகள் அனைவருக்கும் சரியான பயிற்சி மிக அவசியம். பயிற்சி இருந்தால் நிச்சயம் விவசாயிகளின் உழைப்பில், நல்ல இலாபம் பெற முடியும். இத்தகு பயிற்சியை (Training) விவசாயிகளுக்கு, தமிழக அரசே முன்னின்று ஏற்படுத்தி நடத்தி தர வேண்டும். விவசாயிகளும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டால் பலன் பன்மடங்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ரா.வ. பாலகிருஷ்ணன்
Krishi Jagran

மேலும் படிக்க... 

விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை அவசியம் - வேளாண் துறை

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

English Summary: Coconut farmers! Add value to the coconut! Make a profit!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.