Farm Info

Sunday, 17 January 2021 02:42 PM , by: Elavarse Sivakumar

Credit: Aaj Tak

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால், காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

18.01.21,19.02.21, 20.01.21
எதிர்வரும் 3 நாட்களில், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை (Chennai)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

அதிகபட்ச மழைஅளவு (Maximum Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை ஆகியவற்றில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

மீனவர்களுக்கு முன் எச்சரிக்கை எதுவுமில்லை.

விடைபெறும் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை, தென் மாநிலங்களில் இருந்து வரும் 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

18ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)