Krishi Jagran Tamil
Menu Close Menu

18ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

Saturday, 16 January 2021 02:56 PM , by: Elavarse Sivakumar
Poultry breeding training on the 18th!

Credit : Dinamani

திருவண்ணாமலையில் வரும் 18ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளதால், கால்நடை விவசாயிகள் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதிக லாபம் (more profit)

குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் தொழில்களில் கோழி வளர்ப்பும் ஒன்று. அதிலும், நீங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுபவராக இருந்தால், நாட்டுக் கோழி வளர்ப்பு நல்ல பலன் தரும்.

அவ்வாறு நாட்டுக்கோழி வளர்க்க விரும்பும் விவசாயிகளையும் கால்நடை வியாபாரிகளையும் ஊக்குவிக்கும் வகையில், ஒருநாள் நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் (Date of Training)

திருவண்ணாமலையில் உள்ள  கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 18.1.2021 ம் தேதி, திங்கள்கிழமை அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

அனுமதி இலவசம் (No fee)

 • இதில் பங்கேற்பவர்கள் கட்டணமாக எந்தத் தொகையும் செலுத்தத் தேவையில்லை.

 • முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 • முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளுடன் பயிற்சி நடைபெறும் என திருவண்ணமலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ அறியில் பல்கலைக்காக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு
கால்நடை மருத்துவ அறிவியல்

பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

வடஆண்டாபட்டு,

புறவழி சாலை ரோடு,

திருவண்ணாமலை.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

04175 298258, 95514 19375.

மேலும் படிக்க...

தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!

லாபம் தரும் தொழில் நாட்டுக்கோழி வளர்ப்பு 18ம் தேதி பயிற்சி திருவண்ணாமலையில் நடைபெறுகிறது Poultry breeding training on the 18th!
English Summary: Poultry breeding training on the 18th!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. அரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்
 2. கோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்யலாம்?
 3. சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!
 4. PAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்!
 5. இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!
 6. Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
 7. தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் "பீமா ஜோதி" பாலிசி அறிமுகம்!!
 8. கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்! - விவசாயிகள் கோரிக்கை!!
 9. PM Kisan: விரைவில் 8வது தவணை விடுவிப்பு - பயனாளிகளின் புதிய பட்டியல் வெளியீடு!! விவரம் உள்ளே!!
 10. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தாவரவியல் பூங்கா - பொதுமக்களுக்கு அனுமதி!!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.