1. கால்நடை

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
World famous Alankanallur Jallikattu !

Credit : Dinamani

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பாரம்பரிய விளையாட்டு (Traditional Game)

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதில், காளைகளை அடக்குவதும் ஒன்று. இதற்காக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் (Jallikattu Events)

அந்த வரிசையில், மதுரை அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, காளைகளை அடக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இதனை ஏராளமான பாவையாளர்கள் கண்டுரசித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Alankanallur Jallikattu)

இதன் தொடர்ச்சியாகக் காணும் பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதிரை அலங்காநல்லூருக்கு இன்று வருகை தந்தனர். இவர்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ராஜன் செல்லப்பா ஆகியோர் வருகை தந்தனர். முதலில் கோவில் காளைகளுக்கு அவர்கள் மரியாதை செய்தனர்.

முதல்வர், துணை முதல்வர் (CM, Deputy CM)

இதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அமைச்சர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள் (Furious bulls)

வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து அடக்கினர். 

மாடுபிடிவீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் தனித்தனி குழுவாக களமிறக்கப்பட்டனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர்.

கார் பரிசு (Car as a gift)

அதிக காளைகளை அடக்கும் வீரர்கள், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும் தலா ஒரு காரை பரிசான வழங்கினர்.

மேலும் படிக்க...

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: World famous Alankanallur Jallikattu !

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.