மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 July, 2021 10:43 AM IST
Credit : The Financial Express

நெல் கொள்முதலில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளதால், தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்முதல் திட்டம் (Paddy Procurement Scheme)

மத்திய அரசின், பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது.

ஆதரவு விலை (Support price)

இதற்காக விவசாயிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகின்றன.

கொள்முதல் சீசன் (Purchase season)

நடப்பு கொள்முதல் சீசன், கடந்த 2020 அக்டோபரில் துவங்கியது. இது வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. இந்த சீசனில், மத்திய அரசு, 100 கிலோ எடை கொண்ட குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,868 ரூபாயும், உயர்தர நெல்லுக்கு, 1,888 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படுகிறது.

அதனுடன் சேர்த்து தமிழக அரசு, சாதாரண நெல்லுக்கு, 50 ரூபாயும், உயர்தர நெல்லுக்கு, 70 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

அரிசியாகும் நெல் (Paddy is rice)

அவ்வாறு விலைகொடுத்து விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல், வாணிப கழக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அதன், 21 நவீன அரிசி ஆலைகளிலும், வாணிப கழகத்தில் பதிவு செய்துள்ள, 351 தனியார் முகவர் ஆலைகளிலும், அரிசியாக மாற்றப்படுகிறது.

கூலி (Coolie)

இதற்காக, கிலோ புழுங்கல் அரிசிக்கு 20 காசும், பச்சரிசிக்கு 10 காசும் கூலியாக வழங்கப்படுகிறது. சில ஆலைகளுக்கு அனுப்பப்படும் நெல், அங்கிருந்து மீண்டும் விவசாயிகள் பெயரில் உள்ள இடைத்தரகர்களிடம் வழங்கப்படுகிறது.

அதிகாரிகளும் கூட்டு (Officers joint)

அவர்கள் அதை, கொள்முதல் நிலையங்களில் வழங்கி, மீண்டும் குறைந்தபட்ச விலை வாங்குகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு, வாணிப கழக அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து, விவசாயி என்பதற்கான ஆவணங்களைப் பெற்று, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

முறைகேடு (Abuse)

அதற்கான பணம், அவர்களின் வங்கிக்கணக்கில் உடனேச் செலுத்தப்படுகிறது. சில அதிகாரிகள், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை, அரவை ஆலைகளுக்கு எடுத்துச் சென்று, அங்கு அரிசியாக மாற்றாமல், மீண்டும் அந்த நெல்லை, தங்களுக்கு வேண்டிய விவசாயிகள் பெயரில் உள்ள இடைத்தரகர்களிடம் வழங்குகின்றனர்.

சரிபார்ப்பு இல்லை (No verification)

அவர்கள் அதே நெல்லை, மீண்டும் கொள்முதல் நிலையங்களில் வழங்கி, குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுகின்றனர். அவர்கள், தரும் ஆவணங்களையும் சரிபார்ப்பதில்லை.
தமிழக அரசு, நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. இதனால், சிலர் மற்ற மாநிலங்களில் இருந்து நெல்லை வாங்கி, வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்களில் வழங்குகின்றனர்.

கள்ளச்சந்தையில் விற்பனை (Sale on the black market)

ரேஷன் கடைகளில், கார்டுதாரர்கள் வாங்காத அரிசியை, விற்றது போல் பதிவு செய்து, ரேஷன் ஊழியர்கள் கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

அந்த அரிசியை மொத்தமாக வாங்கும் இடைத்தரகர்கள், தங்களுக்கு வேண்டிய சில அரிசி ஆலைகளில் வழங்குகின்றனர். அவை, ஆலையில் அரவை செய்தது போல, மீண்டும் அந்த அரிசியை வாணிப கழகத்திற்கு விநியோகம் செய்கின்றன.

பலகோடி முறைகேடு (Billions of abuse)

இவ்வாறு நெல் கொள்முதலில் துவங்கி, அரிசி வினியோகம் வரை பல ஆண்டுகளாக, பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளன.

இதுதொடர்பாக, தமிழக அரசு தனிக்குழு அமைத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டால், தவறு செய்த அதிகாரிகள், ஆலைகள், விவசாயிகள் பெயரில் உள்ள இடைத்தரகர்கள் என பலரும் பிடிபடுவர்.

முறைகேட்டைத் தடுக்க (To prevent abuse)

கரும்பு விவசாயிகளிடம் இருந்து, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு கொள்முதல் செய்கின்றன. கரும்பு பயிரிடும் முன், எத்தனை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட உள்ளதோ, அந்த நிலம் உள்ளிட்ட விபரங்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். ​

கரும்பு ஆய்வாளர், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்துக்குச் சென்று, கரும்பு பயிரிட்டுள்ளார் என்பதை ஆய்வு செய்து, விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து, பயிர்க்கடன் வழங்க வங்கிகளுக்குப் பரிந்துரை செய்வார். இதனால், கரும்பு விவசாயி என்பது உறுதி செய்யப்படுகிறது. இதே நடைமுறையை, நெல் விவசாயிகளுக்கும் பின்பற்றினால், நெல் கொள்முதலில் முறைகேடு முற்றிலுமாக தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.7,330 கோடி (Rs. 7,330 crore )

நடப்பு சீசனில் இதுவரை, 7.15 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 37.66 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய - மாநில அரசுகளின், 7,328 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கியுள்ளன.

விவசாயிகள் வலியுறுத்தல் (Farmers insist)

எனவே அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதுடன், இனிமேல் முறைகேடு நடைபெறாவண்ணம் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

சம்பங்கி பூ தொடரும் விலை வீழ்ச்சியால் கலக்கத்தில் விவசாயிகள்! கிலோ ரூ.130லிருந்து ரூ.30க்கு குறைந்த அவலம்!!

ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!

English Summary: Crores of rupees in paddy procurement scam - Demand for inquiry!
Published on: 18 July 2021, 10:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now