1. விவசாய தகவல்கள்

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?- மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Will the farmers' struggle end? - Central government calls for talks again!
Credit : Maalaimalar

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சட்டங்களுக்கு எதிர்ப்பு (Opposition to the laws)

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்புல் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டம் (Farmers struggle)

இந்த சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என அறிவித்த பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் உள்ள மாநில எல்லைகளை முற்றுகையிட்டுப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பல மாதங்களாக (For several months)

இந்தப் போராட்டம் 7 மாதங்களாகத் தொடரும் நிலையில், போராட்டத்தை முடக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. விவசாயிகளுடன் மத்திய அரசு 11 முறை பேச்சு நடத்தியது.

பேச்சுவார்த்தைத் தோல்வி (Negotiation failure)

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை நடந்த அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் (In the election)

இந்நிலையில், பாரதீய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பின் தலைவர் குர்ணம் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்.

அரசியலில் விவசாயிகள் (Farmers in politics)

விவசாயிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள இந்த அறிவிப்பால் போராட்டம் திசை திரும்பிச் செல்லும் சூழலும் காணப்படுகிறது. இதனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் தொடங்கிய விவசாயிகள் அரசியலில் நுழையக்கூடிய சாத்தியமும் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் அழைப்பு (Minister call)

இந்நிலையில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியதாவது: விவசாயச் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச, மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்தாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கைவிட வலியுறுத்தல் (Insistence to drop)

விவசாயிகள் போராட்டத்தை துவக்கியப் பின், விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் போராட்டத்தை கைவிட்டு, மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாகப் பேச விவசாய அமைப்புகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்

தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

English Summary: Will the farmers' struggle end? - Central government calls for talks again! Published on: 09 July 2021, 07:49 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.