Farm Info

Sunday, 06 December 2020 11:25 AM , by: Elavarse Sivakumar

Credit: Miele

இந்திய நிறுவனங்களின் தேனில் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இயற்கையான முறையில் தேனீ வளர்ப்போரின் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தேன் தயாரிப்பு நிறுவனங்களின் தேன், ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில், Nuclear Magnetic Resonance (NMR) எனப்படும் அதிநவீன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 13 பிராண்டுகளின் 10 பிராண்டுகளின் தேன்களில் சீனச் சர்க்கரைப்பாகு கலப்படம் செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.

இந்த செய்தி நாடு முழுவதும் தேன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதேநேரத்தில் விழித்துக்கொண்ட வாடிக்கையாளர்கள் பலர் இயற்கையான முறையில் தேனீ வளர்ப்போரின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களில், இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தேனை வாங்க வாடிக்கையாளர்கள் முன்வந்துள்ளனர். இதனால், தற்போது, விற்பனை சூடு பிடித்திருப்திருப்பதாகவும், பலர் முன்பதிவு செய்திருப்பதாகவும், சுத்தமான தேன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், தேனீ வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்கவும் ஏராளமானோர் ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறுகிறார் மஞ்சரி ஹனி (Manjari Honey)நிறுவன உரிமையாளர் பார்த்தீபன். மேலும் அவர் கூறுகையில், வீடுகளிலும், மாடித் தோட்டத்திலும் தேனி வளர்க்க முறையான பயிற்சி அளித்தால், கற்றுக்கொள்ள பலர் முன்வந்திருப்பதாகவும், கலப்படத் தேன் விவகாரம், மக்களை ஆழமாக சிந்திக்க வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Credit : Kindpng

கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

முதல்பரிசோதனை (First Test)

தேனில் கலப்படம் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, மிகவும் எளிமையான வழி ஒன்று உள்ளது. அது என்னவென்றால், ஒரு அரைமணிநேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் தேனை எடுத்து, நாக்கில் நக்கி சாப்பிடவும். ஒரு நிமிடம் கழிந்தபிறகு, உங்கள் தொண்டையில் சிறிய கரகரப்பு, கமுறல் உள்ளிட்டவை ஏற்பட்டதால், நீங்கள் சாப்பிட்டது கலப்படமில்லாத தேன்.

2வது பரிசோதனை (2nd Test)

  • ஒரு ஸ்கூபூன் மெத்தில் ஆல்கஹாலை (Methyl Alcohol) ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்துக்கொண்டு, அதில், ஒரு சொட்டு தேனை ஊற்ற வேண்டும்.

  • தேன் எவ்வித மாற்றத்திற்கு ஆளாகாமல், அடியே சென்று தங்கிவிட்டால், அந்த தேன் சுத்தமானது. கலப்படமில்லாதது.

  • கலப்படத் தேனாக இருந்தால், ஆல்கஹாலில் கலந்து, கரைந்துவிடும்.

இவ்விரு முறைகளைக் கைக்யாண்டு, நங்களிடம் உள்ள தேனின் தரத்தை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என உறுதி அளிக்கிறார் பார்த்தீபன்.

மேலும் படிக்க...

விண்வெளியில் முள்ளங்கி சாகுபடி - அசத்திய Astronaut!

ஒரு அங்குலம் மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)