தமிழ்நாடு அரசு 2022-23ஆம் ஆண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுக்காக்கவும், குறுவை தொகுப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் முழு மானயத்தில் உரம் வழங்கும் நிகழ்ச்சியானது, மீன்சுருட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமையேற்று பேசுகையில் உரிய நேரத்தில் குறுவை தொகுப்புக்கான இடுபொருட்கள் விவசாயிகளிடத்தில் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் அனைவரும் அவற்றினை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் த.சுப்ரமணியன், முன்னிலை வகித்து பேசுகையில் குறுவை தொகுப்பு திட்டம் குறித்தும் மாற்று பயிர் சாகுபடி குறித்தும் எடுத்துக் கூறினார். முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் த.சுப்ரமணியன், முன்னிலை வகித்து பேசுகையில் குறுவை தொகுப்பு திட்டம் குறித்தும் மாற்று பயிர் சாகுபடி குறித்தும் எடுத்துரைத்தார்.
Beef Tweet: சர்ச்சையில் சிக்கிய சென்னை காவல்துறையினர்
முன்னதாக வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி, உதவி வேளாண்மை அலுவலர்கள், பாலாஜி, கோவிந்தராசு, அட்மா திட்ட வட்டார தொழில்நுட் மேலாளர் சகாதேவன், தொடக்க கூட்டுறவு சங்க செயலர் லெட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் முடிவில் குறுவை தொகுப்பு திட்டத்தில் 1 ஏக்கருக்கு ரூ.2466.50 மதிப்புள்ள யூரியா(45 கிலோ), டிஏபி 50 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ வீதம் 20 பயனாளிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை வழங்கி திட்டத்தினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சொ.க கண்ணன் தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தின் பயன் என்ன?
குறுவை பருவத்தில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி மற்றும் நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5,600 வரையிலும் வழங்கப்பட உள்ளது.
NHAI ஆட்சேர்ப்பு 2022: BE படித்திருந்தால் மாதம் 39k சம்பளம்!
இத் திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும்?
குறுவைத் தொகுப்புத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு, டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:
News: 4 நாட்களில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க: அமைச்சர் அறிவிப்பு
இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!