Free Training on Vegetable Cultivation!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் மற்றும் இரண்டு அமைப்புகளும் இணைந்து காய்கறி தொடர்பான இலவச பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. என்னென்ன காய்கறி குறித்த பயிற்சிகள் நடைபெற்றன முதலான தகவல்களை இப்பகுதி வழங்குகிறது.
தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் சென்ற வாரம் நடைபெற்றது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இப்பயிற்சியில் ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, காய்கறி சாகுபடியில் பூச்சி நோய் மேலாண்மை எவ்வாறு செய்வது?, பல பயிர் சாகுபடி மூலம் வருவானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் என்னென்ன? என்பவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பூச்சி கொல்லிகளின் செலவில்லாத விவசாய வழிமுறைகள் குறித்தும், வரப்பு பயிர்களின் பயன்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் புதிய உத்திகள் முதலான பல்வேறு அம்சங்கள் குறித்து இவ்விலவசப் பயிற்சிக் குறித்த நிகழ்வில் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். அதோடு, மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் படிக்க
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 உயர்த்தப்படும்! அமைச்சர் தகவல்!!
விவசாயிகளுக்குச் சலுகை! Grains இணையதளத்தில் இன்றே பதிவு செய்யுங்க!!