
Offer for farmers! Register on the Grains website today!!
விவசாயிகளுக்கு என உருவாக்கப்பட்ட இணையதளத்தில் தமிழக விவசாயிகள் தங்களின் பெயர், ஆதார் எண், மொபைல் எண் முதலான விவரங்களைத் தந்து பதிவு செய்தால் சலுகை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு என உருவாக்கப்பட்ட உழவர் சார்ந்த இணையதளத்தில் தமிழக விவசாயிகள் தங்களின் பெயர், ஆதார் எண், மொபைல் எண் முதலான விவரங்களைத் தர தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு என அரசு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய நாட்டில் உள்ள விவசாயிகளில் தகுதியான மற்றும் சரியான விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றைடைய வேண்டும் என்பதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இணையதளத்தில் தோட்டக்கலைத் துறை, பேரிடர் மேலாண்மை, வருவாய்த்துறை, பட்டு வளர்ச்சி முதலான பல துறைகளும் இணைக்கப்பட உள்ளது.
இந்த கிரைன்ஸ் எனும் இணையதளத்தில், விவசாயிகள் தங்களின் மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு, போட்டோ, நில விபரங்களான பட்டா, சிட்டா உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், தற்பொழுது கிரைன்ஸ் இணையதளத்தில் விவசாயிகள் தங்களின் விவரங்களை பதிவேற்றுவதற்கு தயக்கம் காட்டுவதாக வேளாண் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, இது தொடர்பாக வேளாண் அதிகாரி கூறுகையில், மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் தகுதியான விவசாயிகளுக்கு கிடைத்திட வேண்டும் என்பதற்கு எனக் கிரைன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தற்பொழுது, நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசின் சலுகை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கிரைன்ஸ் எனும் இணையதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் சலுகை கிடைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
வீட்டிலேயே பூண்டு வளர்ப்பது எப்படி? எளிய வழிகள்!
பழங்குடியின விவசாயிகளுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு!
Share your comments