மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 August, 2021 4:02 PM IST
Credit : India TV News

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

வளிமண்டல சுழற்சி (Atmospheric circulation)

தமிழ்நாடு கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

கன மழை (Heavy rain)

இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

23.08.21

டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூறிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடி இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

  • சென்னையைப் பொறுத்தவரைப் அடுத்த 24 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.

  • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழை பதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

22.08.21 முதல் 24.08.21வரை

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.08.21 மற்றும் 26.08.21வரை

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்- சட்டசபையில் இன்று தாக்கல்!

TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்!

English Summary: Heavy rain to build in more than 10 districts - Weather Center Warning!
Published on: 22 August 2021, 03:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now