1. செய்திகள்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்- சட்டசபையில் இன்று தாக்கல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பொது பட்ஜெட் (General budget)

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் சட்டசபையில் நேற்று 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை (Budget) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

காகிதமில்லா பட்ஜெட் (Paperless budget)

இந்த முறை பட்ஜெட்டில் புதிய நடைமுறை அமல்படுத்தப் பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டசபை என்பதை நடைமுறைப் படுத்தும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக பட்ஜெட் பிரதியை வழங்காமல், கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் வாக்குறுதி (Election promise)

முன்னதாக தி.மு.க தேர்தல் அறிக்கையில், வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தனி பட்ஜெட் (Separate budget)

அதன் அடிப்படையில், தமிழக சட்டசபையில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அறிவிப்புகள் (Announcements)

பொது பட்ஜெட்டைப் போலவே வேளாண்மைத் துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள் மற்றும், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நலத் திட்டங்கள் (Welfare programs)

குறிப்பாக விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கருத்துக்கேட்பு (Feedback)

இதை முன்னிட்டு, விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய வேளாண் அமைச்சர், விவசாயிகள் அளித்தக் கருத்துகளின் அடிப்படையில் இரவு, பகலாக பணியாற்றி, பல்வேறு திட்டங்களுக்கு வேளாண் துறை உயர் அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்.

கடன் சுமை (Debt burden)

இந்த திட்டங்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, பல திட்டங்களை இப்போது செயல்படுத்த வாய்ப்பில்லை என நிதித் துறை உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. .

விவசாயிகள் அதிர்ச்சி (Farmers shocked)

பல திட்டங்களை பட்ஜெட்டில் இடம்பெற அவர்கள் அனுமதிக்கவில்லை. அடுத்த பட்ஜெட்டில் பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால், வேளாண் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தமிழக அரசு: இலவச மின்சாரத்துக்கான புதிய திட்டம்?

நகைக் கடன் தள்ளுபடி,எவருக்கெல்லாம்? வெளியான முக்கிய தகவல்!

English Summary: Tamil Nadu government's agriculture budget - tabled in the assembly today!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.