மயிலாடுதுறையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த 2 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது
நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations)
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
சேமிப்பு (Storage)
இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 2 மாதமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்ளிடம் அருகே உள்ள எருகூர் நவீன அரிசி ஆலை கிடங்குக்கு எடுத்துச் செல்லப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் மெத்தனம் (The authorities are complacent
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் பட்டுள்ள நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தார்ப்பாய்கள் இல்லை (No tarpaulins)
நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தார்ப்பாய்கள் இதுவரை கொள்முதல் நிலையங்களுக்கு வழங்காததால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்வதுடன், மழை வரும்போது நனையும் நிலை ஏற்படுகிறது.
மழையில் சேதம் (Damage in the rain)
ஒரு வாரத்துக்கு முன் பெய்த மழையால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
வீணாகும் ஆபத்து (Risk of wastage)
இதனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் எந்த பயனும் இன்றி வீணாகும் நிலை ஏற்படுவதுடன் அரசுக்கும் இழப்பும் ஏற்படும்.
விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)
எனவே கொள்ளிடம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்துக்கு அதிகமான நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்லை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
இதை செய்தால் போதும்- மாமரப் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்!