1. தோட்டக்கலை

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to prepare Jivamirtham?

Credit : Suminter

இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் சவாலானது.

ஜீவாமிர்தம் (Jivamirtham)

அப்படியானால், நோய்களில் இருந்து அனைத்துப் பயிர்களையும் பாதுகாக்க, நோய்களை அண்டவிடாமல் விரட்டக்கூடிய ஒரே மருந்து எதுவென்றால், ஜீவாமிர்தம்.

ஜீவாமிர்தத்தின் நன்மைகள் (Benefits of Jivamirtha)

  • ஜீவாமிர்தம் பாய்ச்சப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

  • ஜீவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது.

  • அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக ஜீவாமிர்தம் மாற்றிவிடுகின்றது.

  • நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஜீவாமிர்தம் பல மடங்கு அதிகரிக்கிறது.

தயாரிக்கத் தேவையான பொருட்கள் (Ingredients)

நாட்டு பசுஞ்சாணம்    - 10 கிலோ
அல்லது நாட்டு பசுஞ்சாணம் மற்றும் நாட்டுக் காளை மாட்டுச்சாணம் என இரண்டையும் தலா 5 கிலோ எடுத்துக்கொள்ளலாம்.

இதில் நாட்டுக் காளை மாட்டுச்சாணத்திற்கு பதிலாக நாட்டு எருமை மாட்டுச்சாணம் சேர்த்தாலும் பரவாயில்லை.

நாட்டு பசுங்கோமியம் - 5 முதல் 10 லிட்டர்

(இதிலும் விருப்பத்தேர்வு செய்துகொள்ளலாம்)

வெல்லம்                   - 2 கிலோ
அல்லது
கரும்புச்சாறு             - 4 லிட்டர்
இருவிதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ

அதாவது தட்டைப்பயறு, துவரை, கொள்ளு, கொண்டைக்கடலை, உளுந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முளைக்கட்டச் செய்து அரைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பண்ணைகளின் வரப்பில் இருந்து எடுக்கப்பட்ட காட்டின் ஜீவனுள்ள மண் - கையளவு
தண்ணீர் - 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு (Preparation)

  • இவை அனைத்தையும் தொட்டியில் விட்டுக்கலக்க வேண்டும். தினமும் 3 முறை என 3 நாட்களுக்குத் தவறாமல் கலக்கிவிட வேண்டும்.

  • ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன.

  • ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர்க் கலவைதான் ஜீவாமிர்தம் ஆகும்.

பயன்படுத்தும் முறை (Method of use)

ஜீவாமிர்தத்தை எல்லா வகைப் பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

மேலும் படிக்க...

வனத்துக்குள் திருப்பூர் திட்டம்! தன்னார்வ அமைப்புகளின் சாதனை!

நிவர் (ம) புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்! விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்ப்பு!

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

English Summary: How to prepare Jivamirtham?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.