Nagapattinam District Magistrate Farmers are advised to use Nano Urea as an alternative to Urea
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது சம்பா / தாளடி நெல் நாற்று விடுதல் மற்றும் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்தருணத்தில் தற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்திற்கு தேவையான யூரியா 1120 மெ.டன், டி.ஏ.பி 500, மெ.டன் பொட்டாஷ் 582 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1215 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடப்பு மாதத்திற்கு தேவையான மீதியுள்ள உரங்களும் நிறுவனங்களிடமிருந்து பெற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா ஒரு ஏக்கருக்கு 500 மி.லி., டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர்பாஸ்பேட் (SSP) மற்றும் கூட்டு உரங்களையும் (Complex), பொட்டாஷ் உரத்திற்கு மாற்றாக ஆலைக் கழிவு மூலம் பெறப்படும் பொட்டாஷ் இடுவதன் மூலம் உரத்தினால் ஏற்படும் செலவினை குறைத்திடலாம். மேலும், நெற்பயிருக்கு தேவையான அனைத்து சத்துகளும் மாற்று உரங்களில் இருப்பதால் (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து), இதனை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
உர விற்பனையாளர்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, ஒரே நபருக்கு ஒட்டுமொத்தமாக POS மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டால், அவர்களது உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
விவசாயிகள் இது சம்பந்தமாக புகார் தெரிவிக்க விரும்பினால் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 9487030650 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்தித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
ஆவின் 'டிலைட்' 90 நாட்கள் வரை கெடாத பசும்பால்
விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!