கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையில், இதை இல்லாமல் பழுக்க வைக்க முடியாது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாம்பழங்களை பழுக்க விவசாயிகள் இன்றும் பின்பற்றும் இயற்கை முறைகள் என்ன? பார்க்கலாம்.
முக்கனியில் பழுத்த முதல் மாம்பழம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு கோவை பழ வியாபாரிகள் அளித்த விளக்கம் இது. கோடை காலம் வந்தவுடன் மாம்பழ சீசன் வந்துவிடும். தள்ளுவண்டி கடைகள், சாலையோரக் கடைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் என எல்லா இடங்களிலும் மாம்பழங்களைக் காணலாம்.
மஞ்சள் மாம்பழத்தின் வாசனை எப்போதும் மக்கள் மனதைக் கவரும்.
மரங்களில் சுரக்கும் எத்திலீன் வாயுவால், இயற்கையாகப் பழுத்து, நமக்குக் கிடைக்கும் மாம்பழங்கள் எப்போதும் தனிச் சுவையுடன் இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாம்பழங்கள் அப்படி பழுக்கவில்லை. ஏனென்றால், அது காயாக இருக்கும் பருவத்திலே அறுவடை செய்யப்பட்டு கார்பைடு கற்கள் மூலமாக பழுக்க வைத்தபின் நம் கைக்கு வந்து சேருகிறது.
இந்த வேலையை விவசாயிகள் செய்கிறார்களா? அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிகளே, இதற்கு காரணம். மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், முதிர்ச்சி அடையும் முன் முழுவதையும் பறித்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
பழுத்த பழங்கள் முதல் பிஞ்சு வரை அனைத்தையும் குவித்து பழுப்பு நிறத்தில் வைத்திருப்பதுதான் இந்த கார்பைடு கல் விஷம். கார்பைடு இல்லாமல் காய்கள் காய்க்காது என வியாபாரிகள் கதையாக அளந்தாலும், விவசாயிகள் பலர் இயற்கை முறையையே பின்பற்றுகின்றனர்.
மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்க அறுவடையில் கவனம் செலுத்துவது அவசியமாகும். முதிர்ந்த காய்களை மட்டுமே முதலில் அறுவடை செய்ய வேண்டும், காய்கள் அசைவதைத் தவிர்க்க வேண்டும்.
பறித்த மாம்பழங்களில் இருந்து பால் வடிந்ததும், பழைய பேப்பரை தரையில் விரித்து பழங்களை பரப்பி வைத்தால் பழங்கள் பழுத்துவிடும்.
காய்களை இயற்கையாக பழுக்க வைக்க சில முறைகளும் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான பழங்கள் இருந்தால், அவற்றை இருட்டு அறையில் புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பது பழமையானது. ஆவாரம் இலை, வேப்ப இலை என அந்தந்தப் பகுதிகளில் இயற்கையாகக் கிடைக்கும் இலைகளை மூடிப் பழுக்க வைப்பது விவசாயிகளின் வழக்கமாகும். இல்லத்தரசிகள் ஆவாரம் இலையைக் கூட பயன்படுத்தாமல் அரிசியில் பழங்களை வைத்து பழுக்க வைப்பார்கள்.
புகை போடாமல் வைக்கோலைப் பயன்படுத்தி பழுக்க வைக்கும் முறைகளும் உண்டு. இவ்வாறு வைக்கும்போது வைக்கோலில் இருந்து வெளியாகும், வெப்பத்தால் மாங்காய்கள், ஒரே வாரத்தில் பழுத்துவிடுகின்றன. இயற்கை முறையில் பழுக்க, மரத்திலேயே மாம்பழங்களை வகைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர். இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் அதிக நாட்கள் சேமித்து வைக்க உதவும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
மாம்பழங்களைப் பாதுகாப்பாகப் பழக்க வைப்பது எப்படி?
மாம்பழ அறுவடையின்போது கடைப்பிடிக்க வேண்டியத் தொழில்நுட்பங்கள்!