விவசாயத்திற்கான உழவன் செயலியில் புதிய வசதி வசதி, 4 புதிய நெல் ரகங்கள் உள்பட 23 புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரூ. 4.2 கோடியில் நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்கும் பணி தீவிரம், பெருந்துறையில் ரூ. 1.43 கோடிக்குக் கொப்பரை தேங்க்காய் ஏலம், அரசு அறிவித்த இழப்பீடு போதாது டெல்டா விவசாயிகள் கவலை, `8 ஏரி, குளங்கள், 60 கி.மீ நீர் வழிப்பாதை' குறித்து அழைப்பிதழ் மூலம் விழிப்புணர்வு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
1. விவசாயத்திற்கான உழவன் செயலியில் புதிய வசதி வசதி
விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த கால்த்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாகவும் வட்டாரம் வாரியாகவும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விவசாயக் கடன் தள்ளுபடி|PM Kisan|இலவச திருமணம்|பட்ஜெட் 2023|வேளாண் விழா 2023|G20 மாநாடு| மேட்டூர் அணை
2. 4 புதிய நெல் ரகங்கள் உள்பட 23 புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 வேளாண் பயிா்கள், 3 தோட்டக்கலை பயிா்கள், 4 மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்களை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிமுகப்படுத்தினாா். மேலும், 10 புதிய தொழில்நுட்பங்கள், 6 பண்ணை இயந்திரங்களையும் புதிய பயிா் ரக விதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
3. ரூ. 4.2 கோடியில் நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்!
போ்ணாம்பட்டு வட்டத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் ரூ. 4.2 கோடியில், சுமாா் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்ற சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதையொட்டி, பக்காலப்பல்லி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன் குத்து விளக்கேற்றி, பூஜை செய்தாா். கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் நெடுமாறன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கின் கண்காணிப்பாளா் சற்குணம், துணை வட்டாட்சியா் பலராமன், உதவிப் பொறியாளா் பூவரசன், ஒன்றிய திமுக செயலா் டேவிட், சின்னதாமல் செருவு ஊராட்சி தலைவா் ராஜமாணிக்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் குமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும் படிக்க: 2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
4. பெருந்துறையில் ரூ. 1.43 கோடிக்குக் கொப்பரை தேங்க்காய் ஏலம்!
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.43 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஒரு லட்சத்து 77 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 72.55க்கும், அதிகபட்சமாக ரூ. 83. 60க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 50க்கும், அதிகபட்சமாக ரூ. 80.26க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1.43 கோடிக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.
5. அரசு அறிவித்த இழப்பீடு போதாது டெல்டா விவசாயிகள் கவலை!
டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையால், பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயிகள், ‘‘பாதிப்புகள் குறித்து முறையாகக் கணக்கெடுப்பு நடத்தவில்லை. முதல்வர் அறிவித்த இழப்பீடு போதாது’’ என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள சங்க்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், 'தஞ்ச்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நாசமியுள்ளன. இந்நிலையில் ஒரு ஏக்கருக்கு 35000 இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
6. `8 ஏரி, குளங்கள், 60 கி.மீ நீர் வழிப்பாதை' குறித்து அழைப்பிதழ் மூலம் விழிப்புணர்வு!
தஞ்சாவூர், பேராவூரணியில் செயல்பட்டு வரும் கைஃபா என்கிற தன்னார்வ அமைப்பு ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை மீட்டெடுத்து சீரமைத்து வருகின்றன. திருச்சியில் 8 ஏரிகள், குளங்களை தூர்வாருவதுடன் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அதன் நீர் வழிப்பாதையையும் சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திருமண அழைப்பிதழ் போலவே அச்சடித்து அனைவருக்கும் கொடுத்து ஒரு விழாவாவே நடத்தியிருக்கும் கைஃபாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
7. மண்புழு உரம் தயாரிப்பு முறை குறித்து வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
அமிர்தா வேளாண்மை கல்லூரி சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் சில செயல்முறை விளக்கங்களை நடத்தினர். அதில் குளத்துப்பாளையத்தின் தலைவர் திருமதி கன்னிகாபரமேஸ்வரி கலந்து கொண்டார். மேலும் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரிப்பு முறையை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
8. விவசாயிகள் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் காலநிலை நிதியை அதிகரிக்க வலியுறுத்தல்
விவசாயத் துறையில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணிக்க விவசாயிகளுக்கு தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதற்காகக் காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஜி-20 உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். காலநிலைக்கு ஏற்ற விவசாயம் அல்லது பசுமை விவசாயத்தை பின்பற்றினால் விவசாயிகளை ஊக்கப்படுத்தலாம் என உறுப்பு நாடுகள் பரிந்துரைத்துள்ளன.
9. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்.28 ஆம் தேதி வரை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மின்சார மானியம் பெறுபவர்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வந்ததுடன் மக்களுக்கு ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியை தமிழக மின் வாரியம், கடந்த 2021 ஆம் ஆண்டு நவ.15 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்.28 ஆம் தேதி வரை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
10. பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று பாசனத்திற்காக 4,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 15.03.2023 முதல் 120 நாட்களுக்கான தண்ணீரை திறந்து விட தமிழ்நாடு முதல்வர் உத்தவிட்டார், இதனைத் தொடர்ந்து, கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வந்தனா கார்க் அவர்கள் பிப்ரவரி 15, 2023 அன்று நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார். எனவே, விவசாய பெருமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா, அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க
மண்புழு உரம் தயாரிப்பு முறையை வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு, பழுது நீக்கம் தொடர்பான பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி ?