1. விவசாய தகவல்கள்

மண்புழு உரம் தயாரிப்பு முறையை வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
மண்புழு உரம் தயாரிப்பு முறையை வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
Practical demonstration of vermicomposting method by amirtha agricultural students

அமிர்தா வேளாண்மை கல்லூரி சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் சில செயல்முறை விளக்கங்களை நடத்தினர். அதில் குளத்துப்பாளையத்தின் தலைவர் திருமதி கன்னிகாபரமேஸ்வரி கலந்து கொண்டார். மேலும் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரிப்பு முறையை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

மண்புழு உரம் மண்ணுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது மற்றும் பயிர்களுக்கு வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது பயிர்கள் இயல்பான நிலையை விட நன்றாக வளர உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்தி விளைவிக்கும் காய்கறிகள் நல்ல தரத்தில் இருப்பதோடு நல்ல பழங்களையும் பூப்பூக்கும் திறனையும் அதிகரிக்கிறது. மண்புழு உரம் இடுவது தொழு உரம் பயன்பாட்டின் அளவைக் குறைக்க வழி வகை செய்கிறது. மேலும், இது தழை சத்து, சாம்பல் சத்து, மணி சத்து ஆகியவற்றை வழங்குகிறது. தென்னந்தோப்புக்குள் உள்ள வீணான நிலத்தில், மண்புழு படுக்கைகள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விவசாயிகள் மண்புழு பை நிறுவுவதன் மூலம் உரத்தின் தரத்தை மேம்படுத்தி அவர்களின் இடுபொருள் செலவைக் குறைக்கலாம். இதை வணிக ரீதியாகவும் உற்பத்தி செய்து பாக்கெட்டுகள் மூலம் சந்தைக்கு விற்கலாம். எனவே வயலில் மண்புழு உரம் சேர்ப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிப்பதுடன், ரசாயனமற்ற உணவுகளை மனித நேயத்துக்கு வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க: UPSC ஆட்சேர்ப்பு 2023: விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 21

செயல்முறை

- முதலில், நிரந்தர அமைப்பு மற்றும் பாலித்தீன் பை இரண்டிலும் மண்புழு உரத்தை நிறுவ வேண்டும்.
- வெர்மி பையின் அளவு 7x4x2.
- உயிர்க் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், இலைகள் ஆகியவற்றை சேகரித்து சுமார் 15 நாட்களுக்கு சூரிய ஒளியில் வைக்கவும்.
- பின்னர் பையின் அடிப்பகுதியில் ஒரு அடுக்கு (2 - 3 அங்குலம்) மணலைச் சேர்க்கவும்.
- மேலும் வயலில் இருந்து சேகரிக்கப்படும் பகுதி மக்கிய மாட்டு சாணம், உலர்ந்த இலைகள் மற்றும் பிற மக்கும் கழிவுகளை சேர்க்கவும்.
- உரம் கலவையை உலர்ந்த வைக்கோல், சாக்கு பைகள் அல்லது தேங்காய் துருவல் கொண்டு மூடி ஈரப்பதத்தை பாதுகாக்கவும்.
- உரத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க தொடர்ந்து தண்ணீரை தெளிக்கவும்.
- 45 நாட்களில் மண்புழு உரம் வயலில் பயன்படுத்த தயாராகிவிடும். மண்புழு இனத்தின் அடிப்படையில் மண்புழு உரம் சிதைவடையும் நாட்கள் வேறுபடும்.

புள்ளிவிவரங்கள்

-வெர்மி பையின் விலை (அளவு - 7*4*2) - விலை ரூ 800 முதல் 1000 வரை.
-ஒரு சதுர அடியில் மண்புழு விடும் அளவு 20 கிராம்.
- எனவே, 1 வெர்மி பைக்கு மண்புழு - 500 கிராம்.
- 500 கிராம் மண்புழுவின் விலை 500 ரூபாய்.
-ஆப்பிரிக்க வகை மண்புழு 45 நாட்களில் சிதைந்துவிடும்.
-மண்புழு உரத்தின் முதல் தொகுதியை சல்லடை செய்யும் போது, மண்புழுவின் அளவு 2 கிலோ இருக்கும்.
-1 மண்புழு ஒரு வருடத்தில் 7 முறை முட்டையிடும்.
-மண்புழு ஒரு முறைக்கு 2 முட்டை இடும்.
- ஒரு முட்டையில் 3 மண்புழுக்கள் குஞ்சு பொரிக்கும்.

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் ப சிவராஜ்
முனைவர் ஈ சத்யபிரியா

எளிதாக்குபவர்

முனைவர் திவ்ய பிரியா
முனைவர் விக்ரமன்
மகாலட்சுமி

மேலும் படிக்க:

PM Kisan| அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு| G20 மாநாடு| தோட்டக்கலை இலவச பயிற்சி

ஆளில்லா விமானம் தெளிக்கும் நடவடிக்கை குறித்த நேரடி செயல் விளக்கம்

English Summary: Practical demonstration of vermicomposting method by amirtha agricultural students Published on: 15 February 2023, 03:24 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.