பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 April, 2023 5:29 PM IST
NIPHA Farm Solutions launches website to order agri equipment spare parts

விவசாய இயந்திர பாக விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணினிகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் இருந்தே NIPHA ரோட்டரி டில்லர்கள் மற்றும் பிற விவசாய உபகரணங்களுக்கான உதிரி பாகங்களை எளிதாக ஆர்டர் செய்யும் முறையை NIPHA Farm Solutions அறிமுகப்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட நிபா ஃபார்ம் சொல்யூஷன்ஸ், ரோட்டரி டில்லர்கள், த்ரஷர்கள் மற்றும் கியர்பாக்ஸ் உற்பத்தி, பல தரப்பட்ட பவர் வீடர்கள் மற்றும் பிரஷ் கட்டர், செயின்சா மற்றும் வாட்டர் பம்ப் போன்ற இயந்திர மயமாக்கப்பட்ட தோட்டக் கருவிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், நிபா தனது உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்காக  புதிய இ-காமர்ஸ் இணையதளமான www.NiphaAgriMart.com-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தை பயன்படுத்தி விவசாயிகளும், இயந்திரபாக விற்பனையாளர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே நிபா ரோட்டரி டில்லர்கள் மற்றும் பிற விவசாய உபகரணங்களுக்கான உதிரி பாகங்களை எளிதாக ஆர்டர் செய்ய இயலும்.

இந்தச் இணையதள சேவையின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என நிபா நிறுவனத்தினர் எதிர்ப்பார்க்கின்றனர். விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் இணையதளத்தில் வெளிப்படையாக ஆர்டர் செய்ய முடியும். வாடிக்கையாளர் தன்மைக்கு ஏற்ப, இணையதளம் பன்மொழி செயல்பாட்டுடன் பயனர் நட்பு உதவியுடனும், தேவையான பாகங்களை கண்டுபிடித்து ஆர்டர் செய்வதை எளிதாக்கும் வகையிலும் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என NIPHA தெரிவித்துள்ளது.

NIPHA Farm Solutions என்பது 60 ஆண்டு பழமையான NIPHA குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது உழவு கருவிகள், கியர்பாக்ஸ்கள், டிஸ்க்குகள், கிரேடர் மற்றும் வாளி பிளேடுகள்(bucket blades) மற்றும் விவசாய இயந்திரங்களுக்கான பல்வேறு உபகரணங்கள், ரயில்வே மற்றும் OEM களுக்கான பவர் ஸ்விட்சிங் தொழில் ஆகியவற்றிற்கான தரமான பாகங்களை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் தனது உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிபா ஃபார்ம் சொல்யூஷன்ஸ் என்பது NIPHA குழுமத்தின் வேளாண் இயந்திரப் பிரிவாகும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேகமான வளர்ச்சியை அடையும் நோக்கில் உறுதியுடன் இயங்கி வருகிறோம் என நிபா குழுமத்தின் தலைவர் ஜிடி ஷா குறிப்பிட்டுள்ளார். NiphaAgriMart.com விவசாயிகள் தங்கள் வருவாயை அதிகரிக்கவும், அவர்களின் பண்ணை இயந்திரங்களின் மூலம் நிலத்தில் வேலை செய்யும் நேரத்தை குறைக்கவும் உதவும்" என்று நிபா குழுமத்தின் இயக்குனர் ஆகாஷ் ஷா தெரிவித்துள்ளார்.

நிபா ஃபார்ம் சொல்யூஷன்ஸ் இந்த நிதியாண்டில் 40 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அறிமுகமான ஆண்டிலேயே களையெடுக்கும் தொழிலை நாடு முழுவதும் எட்டு மாநிலங்களுக்கு வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

ஏப்ரல் 30-க்குள் சொத்து வரியை செலுத்தினால் காத்திருக்கு தமிழக அரசின் பரிசு

English Summary: NIPHA Farm Solutions launches website to order agri equipment spare parts
Published on: 18 April 2023, 05:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now