ஏப்ரல் 30-க்குள் சொத்து வரியை செலுத்தினால் காத்திருக்கு தமிழக அரசின் பரிசு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
5 Percentage incentive if property tax is paid by 30th April

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை (அதிகப்பட்சம் 5000 ரூபாய்) பெறலாம் என நகராட்சி நிர்வாக இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998–ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84 (1) ல், (Five percent of the net property tax payable by an assessee, subject to a maximum of five thousand rupees shall be granted as an incentive, who has paid the property tax within thirty days from the date of commencement of the half-year) என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை (அதிகப்பட்சம் 5000 ரூபாய்) பெற சொத்து உரிமையாளர்கள் தகுதியுடையவர் ஆகிறார்கள்.

சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை செலுத்த பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள், மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என நகராட்சி நிர்வாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். தாமதமாக செலுத்தினால் எந்த வித அபராதமும் விதிக்க முடியாத நிலை இருந்தது.

இதனால் சொத்துவரி நிலுவையில் இருப்பது அதிகரித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

ஒரு கேண்டி பருத்தி 75,000 வரை போகலாம்- ஆனாலும் ஒரு டிவிஸ்ட் இருக்கே..

English Summary: 5 Percentage incentive if property tax is paid by 30th April Published on: 18 April 2023, 03:56 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.