மகளிர் சுய உதவிக்குழுவின் கவனத்திற்கு- உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
How do women self help groups market their products?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரசு சார்பில் அரிய வாய்ப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவோ அல்லது உறுப்பினர்கள் மூலமாகவோ உற்பத்தி செய்யும் பொருட்களை அரசுத்துறை மூலமாக நடத்தும் கண்காட்சிகளில் கலந்து கொண்டு விற்பனை செய்ய அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

காஞ்சிபுரம் மாவட்டம் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியான தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒன்றிணைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக விற்பனை வாய்ப்புகளை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இச்சங்கத்தில் பதிவு செய்து கொண்டு அரசுத்துறைகள் மூலமாக நடைபெறும் விற்பனை கண்காட்சி மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெறவிருக்கும் கோடைக் கொண்டாட்டம் மற்றும் மண்டல, மாநில, மாவட்ட அளவில் நடைபெறவிருக்கும் கண்காட்சிகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கண்காட்சியில் பங்கேற்க பதிவு செய்வது எப்படி?

இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட மேம்பாட்டு அலுவலகத்தில் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மாதிரி, குழுவின் தீர்மான புத்தகம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, இத்தகவலுடன் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் - 631 501 என்ற முகவரியில், மேலாளர் -8438969466 மற்றும் உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) - 9444094282 ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை பதிவு செய்து கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.

மேலும் காண்க:

மதுரை மக்கா.. தப்பித்தவறி கூட Rapido bike taxi பயன்படுத்தாதீங்க இனி

சென்னை டூ பாண்டிச்சேரி முதல் “பீர் பஸ்” - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

English Summary: How do women self help groups market their products Published on: 13 April 2023, 11:34 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.