மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலையோரம் கூடாரங்களை அமைத்தும், டிராக்டர் டிரைலர்கள் மீது தார்பாய் போட்டு மூடி வீடு போன்று மாற்றியும், இரவு நேரங்களில் அதில் தூங்குகின்றனர். பலர் போராட்டக்களத்திலேயே கம்பளி விரித்து தூங்குகின்றனர்.
தன்னார்வலர்கள் உதவி (Volunteers help)
போராட்டத்திற்கு இடையூறு செய்யும் கும்பல் ஒருபுறம் இயங்கி வரும் நிலையில், தன்னார்வலர்கள் (Volunteers) உணவு, உடைகளை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர்.
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உணவு வழங்கி வருகிறார். இதற்காக அவர் போராட்டக்களத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார்.
அழகிய வேலைப்பாடுகள் (Beautiful carvings)
இந்நிலையில், அவர் தனது லாரியை சொகுசு வீடு போன்று மாற்றி அமைத்து அதில் தங்கியிருக்கிறார். லாரியின் பின்பகுதியில் வாசல் அமைத்துள்ளார். அதில் அழகிய வேலைப்பாடுகளுடன், விவசாயத்தின் தார்ப்பரியத்தை விளக்கும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
வாசல் வழியாகக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால், சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. உட்கார சோஃபா(Sofa) , மெத்தை, டிவி(TV), கழிப்பறை (Toilet) என அனைத்து வசதிளும் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி அந்த விவசாயி கூறுகையில், போராடும் விவசாயிகளுக்கு உணவு வழங்கும் சேவையை செய்வதற்காக டிசம்பர் 2ம் தேதி இங்கு வந்தேன். எனது அனைத்து வேலைகளையும் விட்டு இங்கு வந்து சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு உணவு வழங்கினேன்.
ஒரு வாரத்தில் எனக்கு வீடு மற்றும் குடும்பத்தினரின் நினைவு வந்தது. அதனால் இந்த லாரியை வீடு போன்று மாற்றினேன் என்றார்.
மேலும் படிக்க...
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!