1. வாழ்வும் நலமும்

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit: Insidebusiness.ng

மரபுவழி நோயான இந்த சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் (Diabetes) இன்றைய காலகட்டத்தில் 30-40 வயதைக் கடந்த பலருக்கும் பொதுவாக காணப்படுகிறது. இவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிக முக்கியமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த (Blood Sugar Level) போதுமான இன்சுலின் மருந்து கொடுக்கப்படுகிறது. அனைத்து நேரங்களிலும் மருந்தை எடுத்துக்கொள்ள இயலாது என்பதால் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதன் மூலம் நம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, குறிப்பாக 30-40 வயதிற்குட்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு சீரான உணவு முறையை அமைத்துக்கொள்வது மிக முக்கியம்.
இரத்ததில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஐந்து உணவுகள்!

கிளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index - GI) ஒரு குறிப்பிட்ட வகை உணவால் இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை குறிக்கிறது. .குறைந்த அளவு GI கொண்ட உணவு வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்பு தன்மையில்லாத பழுபாகற்காய்!

ஓட்ஸ் (OATS) : ஓட்ஸ் வகை உணவுகள் 55 அல்லது அதற்குக் குறைவான GI - அளவை கொண்டுள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சிறந்த மாற்றாக அமைகிறது. இனிப்பான ஓட்ஸ் அல்லது சுவை மிகுந்த ஓட்ஸ் வகைகளை மட்டும் அதிகளவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பூண்டு (GARLIC): நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறைகளில் ஒரு சிறந்த தீர்வாக பூண்டு விளங்குகிறது. முறையான அளவில் பூண்டை எடுத்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. பூண்டை பச்சையாக எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் உணவு மற்றும் சாலட்களைத் தயாரிப்பதும் சிறந்தது.

விதைகள் (SEEDS): ஆளி விதைகள் மற்றும் உருளைக்கிழங்கு விதைகள் போன்ற விதைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்ததில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. அதில், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால் அவை சர்க்கரையை சரியாக உறிஞ்சி இரத்தத்தில் வெளியிடுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் (Vegetables like BROCCOLI): ப்ரோக்கோலி உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் சல்போராபேன் என்ற நொதி வெளியிடப்படுகிறது. இது கந்தகத்தை சார்ந்து இருக்கும் சர்க்கரையை இரத்தத்திலிருந்து குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு காய்கறிகளும் இன்சுலின் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வகையான காய்கறிகளும் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்கும்.

மேல் காணும் உணவு வகைகள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் உதவுகின்றன. இதுபோன்ற மேலும் பல ஆரோக்கிய டிப்ஸ்களுக்கு உங்கள் தமிழ் கிருஷிஜாக்ரனுடன் தொடர்ந்திருங்கள்....

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

English Summary: Super Foods that keep your Blood Sugar Level in Control Published on: 16 December 2020, 05:43 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.