மழையால் வெங்காயம் அழுக நேர்ந்ததால், வெங்காயத்திற்கு மானியம் வழங்கவேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெங்காயம் சாகுபடி (Cultivation of onions)
காரியாபட்டி அருகே சொக்கனேந்தல் கிராமத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது.
குறிப்பாக காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, மறைக்குளம், சொக்கனேந்தல், சித்தனேந்தல், முஷ்டக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.
மழையால் பாதிப்பு (Damage by rain)
கடந்த வருடம் இந்த பகுதியில் வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டது.
ஆனால் அப்போது பெய்த மழையின் காரணமாக வெங்காய பயிர்கள் முழுவதும் அழுகி எந்த மகசூலும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரூ.80 ஆயிரம் வரை செலவு (Cost up to Rs.80 thousand)
ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிடப்பட வேண்டும் என்றால் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒவ்வொரு விவசாயியும் 5 ஏக்கர் வரை விவசாயம் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு வெங்காயம் முழுவதும் அழுகி விட்டதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். வெங்காயத்திற்குக் காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசுக்குக் கோரிக்கை (Request to Government)
எனவே தங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு வெங்காய விளைச்சலை அதிகமாக்க வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!