Farm Info

Wednesday, 02 December 2020 11:22 AM , by: Elavarse Sivakumar

Credit : Asia Insurance Post

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

  • இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு பெற, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு 2020ம் ஆண்டு சிறப்பு பருவமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் 320 வருவாய் கிராமங்கள் அடங்கும்.

  • கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.444 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும்.

  • காப்பீடு செய்வதற்கான அவசாகம் இம்மாதம் 15ம் தேதிக்குள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன் மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் களை இணைக்க வேண்டும்.

  • கட்டண தொகை செலுத்திய பிறகு அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும், மேலும் விவரங் களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!

புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு

மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)