1. தோட்டக்கலை

மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Yield Insects - Simple Ways to Get Started Naturally!

Credit : Simplicity

நெல், காய்கறிகள், பயறு வகைகள் உள்ளவற்றில், வேர்களில் பெரும் தாக்குதலை ஏற்படுத்தி மகசூலைக் குறைக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் பல யுக்திகள் உள்ளன. அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என இப்போது பார்க்கலாம்.

மஞ்சள் மற்றும் மண்ணெண்ணெய்

சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த ஒரு தகரஷீட்டில் மஞ்சள் பெயின்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப்பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும்.

வெண்டை, பருத்திப்பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 4-5 பொறிகள் வைத்தால் போதுமானது.

இஞ்சி,பூண்டு, மிளகாய் கரைசல்

 • பூண்டு ஒரு கிலோ எடுத்து அதனை மண்ணெண்ணெயில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

 • பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 • அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 • பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 • காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

 • இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

 • காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.

 • இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

 • இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

 • பருவ மழை பெய்தாலும், பொய்த்தாலும், அந்தந்த பருவத்தில், பூச்சிகள் சரியாக வந்து விடுகின்றன.

 • பெரும்பாலான பூச்சிகள், களைச் செடிகளில் தான் இருக்கும் என்பதால், அவற்றை பிடுங்கிவிடலாம்.

 • மழைக்காலம் துவங்கும் முன், வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்காமல் இருக்க, இஞ்சி, பூண்டு கரைசல் தெளிக்கலாம். இதனால், வெட்டுக்கிளி உள்ளிட்ட, பல பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

 • கால் கிலோ பூண்டை உரலில் இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் ஓர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

 • 3 கிலோ காம்பு கிள்ளிய பச்சை மிளகாய், 100 கிராம் இஞ்சியை தனித்தனியாக மை பதத்தில் அரைக்க வேண்டும்.அடுத்த நாள், 10 லி., தண்ணீரில் இவற்றை கலந்து வடிகட்டி, ஒட்டும் திரவத்துக்காக, 100 கிராம் காதி சோப்பை கலக்க வேண்டும்.

 • இக்கரைசலிலிருந்து அரை லிட்டரை எடுத்து, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

 • இக்கரைசல் எரிச்சலுாட்டும் தன்மை கொண்டிருப்பதால், பூச்சிகள் ஓடிவிடும்.

 • மழைக்காலத்தில் நெல் நாற்றை நடும்போது, நுனியை கிள்ளி நடவு செய்ய வேண்டும்.

 • ஏனெனில், நாற்றின் நுனியில் தான், குருத்துப்பூச்சிகள் முட்டையிடும்.

 • ஒரு முட்டைக் குவியலில், 200 முட்டைகள் வரை இருக்கும். அதையும் மீறி தாக்கும் பூச்சிகளை, ஏக்கருக்கு ஒன்று என, விளக்குப் பொறியை வைத்து அழிக்கலாம்.

 • நடவு செய்த, 15ம் நாளுக்கு மேல் நெல் பயிரில், இலை சுருட்டுப் புழு தாக்கத்தால், வெள்ளை நிற கோடு விழும்.

 • இந்த அறிகுறி தென்பட்டால், மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம், வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிக்கலாம்.

 • நிலக்கடலையில் இலை மடக்குப்புழு தாக்காமல் இருக்க, அந்த வயலில் ஊடுபயிராகவும், வரப்புப் பயிராக கம்பையும் விதைத்தால், கம்பு பயிர்களிலிருந்து வரும் மணம், இலை மடக்குப்புழுவை உண்டாக்கும் தாய் பூச்சிகளை விரட்டி விடும்.

 • மழை பெய்தவுடன், பயிர் வளர்ச்சிக்காக அதிக ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர்.

 • இதனால், இலையின் நிறம் கரும்பச்சையாக மாறுவதால், நாமே பூச்சிகளுக்கு அழைப்பு விடுத்தது போலாகி விடும்.

 • பூச்சிக்கு நிறத்தை பகுத்தறிய முடியாது என்றாலும், பயிர்களில் உருவாகும் ஒருவித மணம், அவற்றை கவர்ந்திழுக்கிறது.

 • அதனால், ரசாயன உரத்தை தவிர்த்து, ஜீவாமிர்தம், பஞ்ச கவ்யா போன்ற இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினால், பூச்சிகளின் தாக்குதல் இருக்காது.

தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

English Summary: Yield Insects - Simple Ways to Get Started Naturally!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.