1. தோட்டக்கலை

புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs. 21,000 subsidy for Pungan planting - Agriculture Notice
Credit: You Tube

புதுக்கோட்டை மாவட் டத்தில் புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் நெய்வத்தளி கிராமத்தை சேர்ந்த மோக நாதன் என்ற விவசாயின் வயலில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சுருளிமலை, ஆலோசகர் திருப்பதி ஆகியோர் முன்னிலை யில் ஒரு எக்டர் பரப்பில் புங்கள் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

நடவுப்பணிகளை ஆய்வு செய்த வேளாண்மைத்துதுறை இணை இயக்குநர் மா. பெரியசாமி , நடவுக்கு முன்பு உழவு செய்தல், குழி எடுத்ததல் நடவு மற்றும் நடவுக்கு பின்பு உள்ள நிலைகளைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தவும் அறிவுரை வழங்கினர்.
மேலும் அவர் கூறியதாவது:

  • எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட் டத்தில் 2020-21ஆம் ஆண்டு புங்கன் மற்றும் வேம்பு கன்றுகள் நடவு செய் யும் விவசாயிகளுக்கு ரூ.423-லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

  • இத்திட்டத்தின்கீழ் 5மீx4மீ இடைவெளியில் எக்டருக்கு 500 புங்கன் கன்றுகள் நடவு செய்வதற்கு மானியமாக ரூ.20000ம் வழங்கப்படும்.

  • இதன் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ 1000 என மொத்தம் எக்டருக்கு ரூ.21,000 வழங்கப்படுகிறது.

  • மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

English Summary: Rs. 21,000 subsidy for Pungan planting - Agriculture Notice Published on: 01 December 2020, 10:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.