இன்று பல்வேறு தரப்பினரும், இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையினை நோக்கித் திரும்பி உள்ளனர். இந்த இயற்கை விவசாயத்தில், பஞ்சகவ்யாவின் பங்கு இன்றியமையாதது.
வேளாண்மையில் செற்கையான வேதிப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கை இடு பொருட்கள் அளித்தல் மற்றும் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வதே இயற்கை வேளாண்மை ஆகும். இந்த இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யாவின் பங்கு மகத்தானது.
பஞ்சகவ்யா (panchakavya)
பஞ்சகவ்யா பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியது என்பதுடன், இயற்கை ஊட்டச்சத்து உரமாகவும் விளங்குகின்றது. இதனைக் கொண்டு மண்ணின் தன்மையை மேம்படுத்தி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
தயாரிப்பது எப்படி?
பசுமாட்டிலிருந்து பெறப்படும் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து
முக்கிய இடு பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யாத் தயாரிக்கப்படுகின்றது. இவை தவிர வெல்லம், இளநீர் மற்றும் பூவன் வாழைப்பழம் ஆகியவைகளும் இடுடிபாருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.
இவை அனைத்தையும் சரியாகக் கலந்து நொதிக்கவைத்தால் 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகவ்யாக் கரைசல் தயாராகிவிடும். இவைகளை சரியாகக் கலந்து, தயாரித்த பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தினால், அதிசயமான தீர்வைக் காணலாம்.
பஞ்சகவ்யாவில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலப் பொருட்கள் ஆகியவை உள்ளன.
நுண்ணுயிரிகள்
மேலும் நன்மைபயக்கும் நுண்ணுயிரிகளான லேக்டொபேலசிஸ், சூடோமோனாஸ், ஆக்டினோமைசிட்ஸ், ஈஸ்ட் மற்றும் மெத்திலோரோப்களும் உள்ளன. இவைகள் பயிர்களின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துகின்றன. பஞ்சகவ்யாவை அனைத்து விதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பஞ்சகவ்யாவானது 3 % கரைசல் என்ற அளவில் இலைவழித் தெளிப்பாகப் பரிந்துரை செய்யப்படுகின்றது. மேலும் நீர்ப்பாசன முறையில் ஒரு ஹெக்டேருக்கு 50 லிட்டர் என்ற அளவில் கலந்து சொட்டுநீர்ப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனைப் பாய்ச்சவும்.
பஞ்சகவ்யாவானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, வேர்ப்பெருக்கத்தினை அதிகரித்து, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலிருந்து பயிர்களைப் பாதுகாக்கிறது. மேலும், பயிர்களின் மகசூலை அதிகரிப்பதுடன், தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்யவும், வழிவகை செய்கின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பஞ்சகவ்யாவானது, இப்பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் விற்பனைக்கு உள்ளது. (விலை – ஒரு லிட்டர் ரூ.105).
மேலும் விபரங்களுக்கு,
முனைவர் முரளி அர்த்தனாரி
பேராசிரியர், மற்றும் தலைவர்
சுற்றுச்சூழ்ல அறிவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம்,
கோவை– 641 003.
தொலைபேசி: 0422 - 6611252-452 யைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
PMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்!
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அழைப்பு!