1. விவசாய தகவல்கள்

பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Necessary Steps to follow

பயிர் வளர நிலம் அவசியம் என்பதைப்போல, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறுபட்ட உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. அவை இயற்கை உரங்களாக இருப்பின் மண்ணின் வளம் பெருகும் என்பதே இயற்கை விவசாயிகளின் வாதம்.

அந்த வகையில் பயிர் பாதுகாப்பு மருந்துகளைத் தெளிக்கும்போதுத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளவில்லையெனில் அதனை தெளிப்பவர்களுக்கு பல்வேறு தீய விளைவுகள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே தக்க பாதுகாப்பு முறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

சில வழிமுறைகள் (Protective Methods)

 • பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிந்துரை செய்யப்படும் அளவு மட்டுமே தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

 • கைத்தெளிப்பான் எனில் 200 லிட்டர், விசைத் தெளிப்பான் எனில் 60 விட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.

 • மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, கண்ணாடி, மூக்கு, வாய் கவசம் மற்றும் முழுக்கை சட்டை கண்டிப்பாக ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்து கொண்டுதான் மருந்து தெளிக்க வேண்டும். இதன்மூலம் 99 சதவீத மருந்தானது உடலின் மேல் படுவது தவிர்க்கப்படும்.

 • கொள்கலன் மேலுள்ள லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நன்கு படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

 • பூச்சிக்கொல்லி மருந்துகளைக் காலை அல்லது மாலை வேளைகளில் அதாவது குளிர்ச்சியான பொழுதுகளில் மட்டுமே தெளிக்க வேண்டும்.

 • மருந்தினை அளப்பதற்கும், கலக்குவதற்கும் கண்டிப்பாக வெறும் கைகளைப் பயன்படுத்தக்கூடாது. அதற்குறிய தகுந்த உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

 • ஒரே மருந்தினை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.

 • மழை பெய்யும் போதும்போதோ, பலமான காற்று வீசும்போதோ, மருந்தினைக் கட்டாயம் தெளிக்கக்கூடாது.

 • மருந்து தெளிக்கும் சமயங்களில் தெளிப்பவர் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ , புகை பிடிக்கவோ, மூக்குப்பொடி போடவோ கூடாது.

 • மருந்து தெளிப்பவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 ஏக்கருக்கு மேல் மருந்து தெளிக்கக்கூடாது.

 • மருந்து தெளித்து முடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும் .

 • கொள்கலன் மற்றும் அதனைக் கழுவிய நீர் ஆகியவற்றை நீர் நிலைகளில் கலக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடித்தால், பூச்சிக்கொல்லிகளால் உடலுக்கு ஏற்படும் தீமைகளைத் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க...

ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!

மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு!

English Summary: Do you use crop protection drugs? Necessary steps to follow

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.