மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 April, 2021 11:33 AM IST

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணத்தை மத்திய அரசு டெபாசிட் செய்து வருகிறது. பயனாளிகளின் பெயர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா, இல்லையா என்று செக் (Check) பண்ணலாம்.

பிஎம் கிசான் திட்டம் (PM- Kisan Scheme)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி (pm kisan samman nidhi yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கான நிதியுதவியை மத்திய அரசு விரைந்து வழங்கி வருகிறது.

பெறத் தகுதியுள்ளவர்கள் யார்? (Who is eligible to receive?)

பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி இல்லை (Not eligible)

அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லை.

8-வதுத் தவணை (8th installment)

ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல் தவணைப் பணம் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையில் வழங்கப்படுகிறது. இந்தத் தவணைப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

தற்போது எட்டாவது தவணைப் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு டெபாசிட் செய்யத் தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செக் (Check)செய்வது எப்படி?

  • பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று நீங்களே பணம் வந்துவிட்டதா, இல்லையா என்று பார்க்கலாம்.

  • இந்த இணையப் பக்கத்தை ஓப்பன் செய்தால் அதில்Farmers Corner என்ற வசதி இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

  • beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இதை ஓப்பன் செய்தவுடன் புதிய திரை ஒன்று வரும். அதில் ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும்.

 

  • ஒருவேளை உங்களது திரையில் ’FTO is generated and Payment confirmation is pending’ என்ற தகவல் குறிப்பு இருந்தால் உங்களது பணத்தை டெபாசிட் செய்யும் பணி நடந்துவருகிறது.

  • விரைவில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று புரிந்துகொள்ளலாம்.

 மேலும் படிக்க...

தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!

உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!

தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?

English Summary: PM-Kisan 8th installment - did you received or not? Isn't it Simple way to make sure!
Published on: 04 April 2021, 11:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now