1. விவசாய தகவல்கள்

PM-Kisan Scheme: 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,000 பணம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2,000 for 45 lakh farmers

Credit : DNA India

PM- Kisan திட்டத்தின் கீழ் 43 நாட்களில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதியுதவி கிடைத்துள்ளது.

பிரதமரின் கிசான் (PM- kisan Scheme)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது.
2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் தகுதி (Farmers qualify)

அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிஎம் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

யாருக்கு தகுதி இல்லை  (Who does not deserve it)

அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 43 நாட்களில் மட்டும் சுமார் 45 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியுதவி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

9 கோடி விவசாயிகள் (9 Crore Farmers)

கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதியில் மட்டும் மொத்தம் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. பிப்ரவரி 8ஆம் தேதி வரையில் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 9,45,18,692 ஆக உயர்ந்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட போது மொத்தம் 14.5 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக 25 மாதங்களில் 11.53 விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். 2.97 கோடி விவசாயிகளுக்கு உதவி சென்று சேரவில்லை.

மேலும் படிக்க....

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

விவசாய பயிர்கள் கடன் தள்ளுபடி அரசாணை வெளியிட்டார் தமிழக முதல்வர்!

English Summary: PM-Kisan Scheme: Rs 2,000 for 45 lakh farmers

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.