மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 August, 2021 7:33 AM IST
Credit: The Economic Times

விவசாயிகளுக்குப் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடியைப் பிரதமர் நரேந்திரமோடி இன்று விடுவிக்கிறார்.

பிரதமரின் கிசான் (Prime Minister's Kisan)

விவசாயிகளின் நலன்கருதி மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது பிரதமரின் கிசான் திட்டம்(PM Kisan Scheme) .

ரூ.6000 நிதியுதவி (Rs.6000 financial assistance)

இந்த பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் நிதியதவி வழங்கப்படுகிறுது. இது, மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

ரூ. 1.38 லட்சம் கோடி (Rs. 1.38 lakh crore)

இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இதன் காரணமாக, பிரதமரின் கிசான் திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

8 தவணைகள் (8 installments)

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஏற்கெனவே 8 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. அதாவது, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.1.38 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

9-வது தவணை (9th installment)

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கிறார்.

ரூ.19,500 கோடி (Rs 19,500 crore)

இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

கலந்துரையாடல் (Discussion)

இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

பணம் வந்துவிட்டதா? இல்லையா? (Has the money arrived? Isn't it)

  • இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு பயனாளியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வதற்கு pmkisan.gov.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

  • அதில் மெனு பாரில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் 'beneficiary list' என்பதில் உள்நுழைய வேண்டும்.

  • பிறகு உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

  • பின்னர் 'Get information' என்பதை கிளிக் செய்து பார்த்தால் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

புகார் அளிக்க (To complain)

விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களுக்குப் பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம். PM Kisan Toll free Number: 18001155266 PM Kisan Helpline Number: 155261 PM Kisan Landline Number: 011-23381092, 23382401 PM Kisan Helpline:0120-6025109 Email முகவரி: pmkisan-ict@gov.in மூலமாகவும் புகார் செய்யலாம்.

மேலும் படிக்க...

விரைவில் கிடைக்கப் போகிறது பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் தவணை!

விவசாயிகளுக்கு உதவ விவசாயிகள் உதவி மையம் - வேளாண் துறை!!

English Summary: PM-Kisan: PM releases Rs 19,500 crore for 9th installment of PM Kisan scheme today
Published on: 09 August 2021, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now