1. விவசாய தகவல்கள்

அடுத்த வாரம் வேளாண் பட்ஜெட்- அம்சங்கள் குறித்து விவசாயிகளிடம் இன்றுக் கருத்துக்கேட்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Next week's agriculture budget - Ask farmers today about the features to be included!

தமிழக சட்டப்பேரவையில் அடுத்த வாரம், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகளிடம் மீண்டும் கருத்து கேட்பதற்காக, சென்னையில் இன்று அவசர கூட்டம் நடைபெறுகிறது.

2 விதமான பட்ஜெட் (2 types of budget)

மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்தியில் ரயில்வேத் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதனை பொது பட்ஜெட் உடன் இணைத்து ஒரே பட்ஜெட்டாக பாஜக அரசு மாற்றியது.

அதேசமயம் பல்வேறு மாநிலங்களில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என இரண்டு விதமான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு முடிவு (Decision of the Government of Tamil Nadu)

அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கையில் தகவல் (Information in the election statement)

ஏனெனில், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும் வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு கொண்டு வரும் என ஏற்கனவே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விவசாயச் சங்கங்கள், அமைப்புகள், மற்றும் வல்லுநர்களுடன் ஆலோசித்துச் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அடுத்த வாரம் பட்ஜெட் (Budget next week)

இந்நிலையில், அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும்


தமிழகம் முழுவதும் (All over Tamil Nadu)

அதாவது தமிழகத்தில் முதல் முறையாக, வேளாண்மைக்கு என, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, கடந்த மாதம், 18ம் தேதியில் இருந்து, ஒரு வாரத்திற்கு,  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், வேளாண்துறை சார்ந்த அதிகாரிகளும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கருத்துக் கேட்பு (Feedback)

ஆங்காங்கே இருக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்து கேட்டனர். இந்த கருத்துக்கள் அடிப்படையில், வேளாண் பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர்.

சென்னைக்கு அழைப்பு (Call to Chennai)

இந்நிலையில், ஏற்கனவே நடந்த கூட்டங்களில் சிறந்த கருத்துக்களைக் கூறிய விவசாயச் சங்க பிரதிநிதிகளில், மாவட்டத்துக்கு ஒருவர் என 38 பேரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், அவசரமாக சென்னைக்கு வரப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பங்கேற்பு (Ministerial Participation)

சென்னை, எழிலகம், வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில், இன்று ஆலோசனை நடைபெறுகிறுது. இந்தக்கூட்டத்தில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தோடு, துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)

அப்போது, வேளாண் மாதிரி பட்ஜெட்டை, விவசாய சங்க பிரதிநிதிகளிடம் காட்டி, அதில் விடுபட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டுமாறு கேட்க உள்ளனர்.
இந்தக்கூட்டத்தில் அவர்கள் கூறும் விஷயங்களையும், வேளாண் பட்ஜெட்டில் சேர்க்க, அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்!

English Summary: Next week's agriculture budget - Ask farmers today about the features to be included! Published on: 08 August 2021, 09:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.