இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 February, 2022 8:03 AM IST

பிஎம் கிசான் திட்டத்தின் 11-வது தவணைத் தொகை, அடுத்தவாரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிஎம் கிசான் திட்டம்

இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-kisan) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

11-வது தவணை

பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 11வது தவணையை வரும் மார்ச் 1ஆம் தேதி டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் ஒருவேளை, தாமதம் ஏற்பட்டாலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணம் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணம் வராவிட்டால்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிறையப் பேருக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை. அவ்வாறு பணம் இன்னும் வரவில்லை என்றால் இந்த எண்களில் புகார் செய்யலாம்.

PM கிசான் இலவச எண்                - 18001155266.
பிஎம் கிசான் ஹெல்ப்லைன் எண் - 155261.
லேண்ட்லைன் எண்கள்                 - 011 23381092, 23382401.
புதிய ஹெல்ப்லைன்                     - 011 24300606
மற்றொரு ஹெல்ப்லைன்              - 0120 6025109

புதிய விதி

  • பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள் இ-கேஒய்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • PM Kisan வெப்சைட்டில் சென்று, எந்தவொரு விவசாயியும் தனது ஆதார் எண், மொபைல் நம்பர் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு தங்களுடைய ஸ்டேட்டஸ் சரிபார்த்துக் கொள்ளலாம்.

  • மார்ச் 31ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி முடிக்காவிட்டால் பணம் கிடைக்காது. பிஎம் கிசான் வெப்சைட்டில் உள்ள ’farmers corner' வசதியில் இ-கேஒய்சி முடிக்கலாம்.

மேலும் படிக்க...

PFக்கும் வந்துவிட்டது வரி- புதிய விதிகள் விரைவில் அமல்!

வீடு கட்ட ரூ.2.67 லட்சம் மானியம்- பெறுவதற்கான வழிமுறைகள்!

English Summary: PM-Kisan Update - When is the 11th installment for farmers?
Published on: 22 February 2022, 10:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now