1. மற்றவை

வீடு கட்ட ரூ.2.67 லட்சம் மானியம்- பெறுவதற்கான வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2.67 lakh grant to build a house - Instructions for obtaining!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியப் பணம் வந்துள்ளது. அதை எவ்வாறு சரிபார்ப்பது, மானியம் வராவிட்டால் என்ன செய்வது போன்ற விவரங்களை அனைவருமேத் தெரிந்து கொள்வது அவசியம்.

ரூ.2.67 லட்சம் மானியம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 'அனைவருக்கும் வீடு’ என்ற இந்த கனவுத் திட்டத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல்முறையாக வீடு வாங்கும் போது ரூ.2.67 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

குற்றச்சாட்டு

பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நிறையப் பேருக்கு மானியம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை படிவத்தில் நிரப்புவதால் மானியம் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் முதல் முறையாக ஒரு வீட்டை வாங்குபவராக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மீறப்பட்டால் அவருக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

தகுதி

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெற, அரசாங்கம் குடும்ப வருமானத்தை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது:
அவை, ரூ.3 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம். இதில் வேறுபாடு இருந்தாலும் மானியம் கிடைக்காது.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு, குறைந்த வருவாய் பிரிவினரின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் ரூபாய் வரை உள்ள நடுத்தர வருவாய் பிரிவினரின் குடும்பங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

சரிபார்ப்பது எப்படி?

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மானியம் வந்ததா என சரிபார்க்க, ஆவாஸ் யோஜனா இணையதளத்தைப் பார்க்க வேண்டும். https://pmaymis.gov.in/. அதன் பிறகு, 'Search Beneficiary' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து 'Search By Name' என்ற வசதியில் சென்று, உங்கள் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் பெயரைப் போலவே உருவாக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் பட்டியல் தோன்றும். அந்தப் பட்டியலில் உங்களுடைய பெயரைச் சரிபார்க்கலாம்.

புகாருக்கு

மானியம் வராத விவசாயிகள் Pradhan Mantri Awas Yojana (Urban) Ministry of Housing and Urban Affairs Nirman Bhawan, New Delhi-110011 என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம். அல்லது 011-23063285, 011-23060484 என்ற லேண்ட்லைன் நம்பரைத் தொடர்புகொள்ளலாம். அல்லது pmaymis-mhupa@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிலும் புகாரைப் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க...

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படம்- கண்டுபிடிப்பது எப்படி?

English Summary: Rs 2.67 lakh grant to build a house - Instructions for obtaining! Published on: 22 February 2022, 10:31 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.